பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/79

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

48 திருமகள் பெயர்கள். பொதுவில் குறள் மலர்மிசை ஏகினான்: என்றது. முருகனது காதலி வள்ளியை, - "நறுமலர் வள்ளிப்பூ நயந்தோயே”77

  -என்று 'பூ'வாகவே பாடியது பரிபாடல்.

அடியவர் பூ முருகனோ உதயகுமரனோ என ஏற்பட்ட ஐயத்தை மலர்ச்சின்னம் தீர்த்தது. இதுபோன்று திருமங்கையாழ்வாருக்குஓர் ஐயம் எழுந்தது.

ஆனால், இது தெளிவோடு ஏற்பட்ட ஐயம். ஆழ்வார்களில் நம்மாழ்வார் திருமாலே போன்று கொள்ளப்பட்டவர்;போற்றப்பட்டவர் திருமங்கையாழ்வார். இந்நோக்கில் நம்மாழ்வாரைப் பார்க்கின்றார். இத்திருவுரு திருமால்திருவுருவோ, நம்மாழ்வார் திருவுருவோ என்று ஐயங்கொண்டவர் போன்று வினவுகின்றார்.

'இப்பெருமானுக்கு, இருப்பிடம், திருக்குருகூரோ (நம்மாழ்வார் ஊர், திருப்பாற்கடலோ? பெயர், பராங்குசனோ (நம்மாழ்வார் சிறப்புப்பெயர்), நாரணனோ? சூடும் சின்னப்பூ, மகிழம்பூவோ (வகுளம்), துளசியோ தோள்கள் இரண்டோ, நான்கோ1:18 & & - - -என்பதன் மூலம் நம்மாழ்வாரது பூ (வகுளம்) மகிழம்பூ எனப்பாடினார்.

அழகர் பிள்ளைத் தமிழ் என்ற நூலும், 'இருபுறம் வகுளம் நாற்றிய'79 -என்று பாடியது.இதனால், கடவுளர்க்கு அடையாளப்பூ அமைந்ததுபோன்று கடவுள் அடியார்க்கும் சின்னப்பூவைக் காண முடிகின்றது.

77 : 14 : 22 . . 78 சேமம் குருகையோ; செய்யதிருப் பாற்கடலோ? நாமம் பராங்குசனோ, நாரணனோ? -தாமம் துளவோ, வகுளமோ? தோளிரண்டோ, நான் கோ? உணவோ பெருமானுக் கு. . 79 அழ. பி. த: 18