பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/80

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



44

இவ்வாறாகும் சின்னப் பூக்கள் பொன்னால் செய்யப்பட்ட பொற்பூவாகவும் சூடிக் கொள்ளப்பட்டன - சூட்டப்பட்டன. இயற்கையில் பூக்காது செயற்கையில் செய்யப்படுவதால் “பூவாப் பூ” “நெருப்பில் பிறந்த பூ” என்றும் குறிக்கப்பட்டன. “பொலம்பூந் தும்பை” “பொற்பூ”80 எனப்பட்டன.

பரிசுப் பூ; பட்டப் பூ,

அரசனைப் புகழ்ந்தும் பாடியும் ஆடியும், புலவரும் பாணரும், பாடினியரும் பொருநரும் பரிசு பெறுவர். பரிசாகப் பல வளமான பொருள்கள் வழங்கப்படும். மேலும் பொன்னாற் செய்யப்பட்ட சின்னங்களையும் வழங்கினர். அப்பரிசாம் சின்னமும் பூ வடிவாகச் செய்யப்பட்டது.

மலர்களிற் பெரியதும், அதிக இதழ்களை உடையதும், மலர்களின் தலைவி எனத்தக்கதுமான தாமரைப் பூ வடிவில் இப்பரிசுச் சின்னங்கள் அமைந்தன. பொன்னாற் செய்யப்பட்டு வாடாமையால் “வாடாப் பூ” எனப்பட்டது.

பாணனுக்குப் பொன்னாற் செய்யப்பட்ட தாமரைப் பூ,

பாடினிக்குப் பொற்பூவால் ஆகிய மாலை, பரிசுகளாக வழங்கப்பட்டன.


“வாடா மாலை பாடினி அணியப்

    பாணன் சென்னிக் கேணிப் பூவா 
    எரிமருள் தாமரைப் பெருமலர் தயங்க”81
-என்பது புறம்.

“மறம் பாடிய பாடினியும்மே

ஏருடைய விழுக்கழஞ்சிற் 
சீருடை இழைபெற்றிசினே; 
இழைபெற்ற பாடினிக்குக்
  80 புறம் : 2: 14 
  81 புறம் : 11: 11-18