பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62


திருமணம் கமழ்ந்து, வண்ணக் குடும்பம் அமைத்து, வண்டுக்கு விருந்தளித்து வளரும் இம் மலர்ப்பருவம் இல்லற நம்பி - நங்கை நிலை போன்றது.

இந்நங்கை
இதழ்களால் பட்டுப் பாளம்
கமழ்வால் மணச் சுரபி
தேனால் சுவை ஊற்று
நிறத்தால் வண்ணக் கிண்ணம்
தாதுக்களால் சுண்ணச் சிமிழ்,
காட்சியால் எழிற்குமரி;
அசைவால் கவர்ச்சிக் கூத்து:
இசைவால் உணர்ச்சித் தென்றல்
கவர்ச்சியால் சந்தனப் பேழை;
மலர்ச்சியால் மங்கலச் சின்னம்.

மங்கலத்திலும் சொல்லே மங்கலம்: மணமொரு மங்கலம். கண்டால் மங்கலம், கேட்டால் மங்கலம்; காட்டினால் மங்கலம்; சூட்டினால் மங்கலம். எனவே, மலர்ப் பருவம் ஒரு மங்கலப் பருவம்.

6. அலர்ப்
பருவம்
"சுடர் நோக்கி மலர்ந்து ஆங்கே படக் கம்பும் அலர்' [1] -இவ்வடிகளில் எனது இனத்துத் தாமரை, கதிரவனை நோக்கி மலர்ந்து மலர் ஆயிற்று. கதிரவன் மறைவதால் கூப்பும்போது அலர் ஆகிவிட்டது. காலையில் மலர்; இஃதே மாலையில் அலர்.

[ஓாிதழ் மலர் தவிரப் பிற] மலர்களின் புற இதழ்கள் உதிர அகவிதழ்கள் விரியும். விரிந்தவை கீழ்நோக்கி வளைந்து பரவும். விரிதலும் பரவலும் அலர்தல்' எனப்படும் இதனால் அலர்' எனப்பட்டேன். மலரின் விரிவே அலர். இதுகொண்டே நிகண்டுகள் இப்பருவத்தை "விரிமலர்' [2] என்று குறித்தன. விரிந்து மல


  1. 28 கலி ; 78 , 17
  2. 24. "இகமலர் வெதிர் தொடர்ப்பூ விரிமலரே பிங். நி: 2824

.