10
1806
நிலை காரணமாகவும் பசுத்தோல் போர்த்த புலிகளாய் வேலூரிலிருந்த ஆங்கிலப் படையில் வீரராய் விளங்கினர். இவர்களே எல்லாம் ஒன்று திரட்டி உபதேசங்கள் புரிந்து சுதந்தர வீரர்களாக உருவாக்கும் வாய்ப்பும வல்லமையும காலத்தின் கையிலும், சிறை வைக்கப்பட்டிருந்த திப்புவின் மைந்தர்களின் திறமையிலும் பெரும்பாலும் அடங்கியிருந்தன. திப்புவின் மைந்தர் பன்னிருவரையும் மகளிர் அறுவரையும் அந்நாளில் வேலூர்க் கோட்டையில் சிறை வைத்திருந்தது கும்பினி ஆட்சி. பலம் பொருந்திய காவலில் அவர்கள் இருப்பதாகக் கருதப்பட்டாலும், உண்மை நிலை அதுவன்று. பெரிய அளவிற் சுதந்தரம் நிறைந்த சிறைக் கைதிகளாய் வாழும் வாய்ப்பினைத் தமது தந்திரத்தாலேயே தேடிக்கொண்ட திப்புவின் குடும்பத்தினருக்கு ஏராளமான உற்றாரும் உறவினரும் தோழரும் துணைவரும் கோட்டையின் உள்ளும் புறமும் நிறைந்திருந்தனர். மூவாயிரவருக்குக் குறையாத மைசூர் நாட்டினர், அவர்களது எதிர்காலத்தில் கருத்துடையவர்களாய், வேலூரில் குடியிருந்தனர். அவர்களுடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு அன்பு காட்டிய பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களும் வேலைமாநகரின் குடிமக்களாய் விளங்கினார்கள். கணக்கிட்டுப் பார்க்கும் போது வேலூரை இராணுவ பலத்தால் அடக்கி ஆண்ட பட்டாளத்தின் தொகையைவிட அதை முறித்து எறியக்