பக்கம்:1806 (ந. சஞ்சீவி).pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேலூர்ப் புரட்சி

13



பிகள் கிழக்கிந்திய பாண்டு வாத்தியக்காரர்களின் குல்லாய்கள் போலிருக்கின்றன. எனவே, எங்களால் அவற்றை நிச்சயமாக அணிய இயலாது” என்று உறுதியாக மறுத்து விட்டனர்.

வேண்டுகோள் ஏறவில்லை : அ ச் ச ம ய த் தி ல் வேலூரில் படைத்தலைவர்களாய் இருந்த வெள்ளை அதிகாரிகளும் தங்கள் கீழிருந்த சிப்பாய்களின் மனக்கொதிப்பை மேலிடத்திற்குச் சுட்டிக் காட்டிப் புதிய உத்தரவுகளை மாற்றும்படி மன்றாடினார்கள். ஆனால், கொடுங்கோலர்களின் செவியில், அறம் பிறழா வகையில் படை வீரர்களும் அவர்கள் தலைவர்களும் செய்துகொண்ட வேண்டுகோள் சற்றும் ஏறவில்லை. உள்ளத்தில் கிளர்ந்தெழுந்த எண்ணங்களை ஒளியாமல் வெளியிட்ட வேலூர் வீரர்கள், கைக்குட்டைகளால் முக்காடிடப்பட்டு, சென்னைக் கோட்டைக்கு இழுத்துச் செல்லப்பட்டார்கள். விசாரணை நாடகத்திற்குப்பின் நீதியின் பெயரால் தீர்ப்புகளை வழங்கியது கும்பினி ஆட்சி. அதன்படி ஒரு முஸ்லீமுக்கும் இந்துவுக்கும் முறையே தொள்ளாயிரம் தொள்ளாயிரம் சாட்டையடிகள் கொடுக்கப்பட்டன. சாட்டை அடிகளால் பிழிந்து சக்கையாக்கப்பட்டவர்கள் உத்தியோகத்தினின்றும் நீக்கப்பட்டார்கள். மேலும் பத்தொன்பது பேர்கட்கு ஐந்நூறு ஐந்தாறு சாட்டையடிகள் கொடுத்ததுடன் 'மன்னிப்பும்' வழங்கப் பெற்றது. இவ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:1806_(ந._சஞ்சீவி).pdf/15&oldid=1137672" இலிருந்து மீள்விக்கப்பட்டது