பக்கம்:1806 (ந. சஞ்சீவி).pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

1806



வாறு தனியார்களைத் தண்டித்ததோடு சுகந்தர உணர்ச்சி கொண்ட அவ்வேலூர் பட்டாளத்தின் பிரிவையே கலைத்தொழித்து, அதன் இடத்தில் புதுப்படை ஒன்றை நியமித்தது கும்பினி ஆட்சி. இவ்வாறே வாலாஜாபாதில் தம் வெறுப்பை வெளிப்படுத்திய ஒரு சுபேதாரை வேலையை விட்டே வெளியேற்றியது வெள்ளை அரசாங்கம்.

அறவழிப்பட்டு உள்ளத்தைத் திறந்து காட்டிய வேலூர், வாலாஜாபாது வீரர்கட்கு நேர்ந்த இந்த அநீதிகளையும் அவமானங்களையும் நினைந்து சிப்பாய்கள் மனம் குமுறினார்கள். அவர்கள் உள்ளத்தில் பழிவாங்கும் உணர்ச்சி கிளர்ந்து எழுந்தது. வேலூர்க் கோட்டையில் நள்ளிரவு நேரங்களில் இரகசியக் கூட்டங்கள் நடைபெற்றன. மறைமுகமாகப் புரட்சி வேலைகள் செய்ய மன்றங்கள் நிறுவப்பட்டன. அக்கூட்டங்களிலும் ஆவேசம் மிக்க சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பெற்றன. அக்கூட்டங்கட்கெல்லாம் மாவீரன் திப்புவின் மக்களும் வேலூர்ப்பட்டாளத்தின் சுதேசி அதிகாரிகளுள் பெரும்பாலாரும் வந்திருந்து, 'ஒங்குக புரட்சி ! உறுக வெற்றி!' என்று ஆசி கூறினார்கள். ஆரம்பத்தில் இந்நிகழ்ச்சிகள் இரகசியமாகவே நிகழ்ந்தன. ஆனால், நாளடைவில் ஊர் வாயை மூடுவது அரியதாகிவிட்டது. மெல்ல மெல்ல இச்செய்தி திக்கெட்டிலும் பரவியது. இரவு நேரங்களில் ஏராளமான பல்லக்குகளில் அஞ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:1806_(ந._சஞ்சீவி).pdf/16&oldid=1137680" இலிருந்து மீள்விக்கப்பட்டது