பக்கம்:1806 (ந. சஞ்சீவி).pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேலூர்ப் புரட்சி

21



திலேயே, இருந்த குண்டுகளை எல்லாம் இழந்து விட்டனர்; ஆதலின், வெறுங்கையராய்த் தவித்தனர்.

கொத்தளங்கள்: மேலும், கொத்தளத்தின் அடியில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்த கிடங்கிலிருந்த பொருள்கள் யாவற்றையும் நம் வீரர்கள் முன்பே சூறையாடிவிட்டார்கள். இதையறிந்த துரைமார்கள் அடைந்த துக்கம் சொல்லி முடியாது. இது வரை நடைபெற்ற போராட்டத்தில் கோட்டையிலிருந்த 372 பேரைக் கொண்ட ஒரு வெள்ளைப் படைப் பிரிவில் 199 பேர் கொலை செய்யப்பட்டனர். இவற்றால் எல்லாம் மனம் உடைந்து போயிற்று பறங்கிக் கூட்டம்; எனினும், நம் சிப்பாய்களின் கடுமையான தாக்குதலையும் பொருட்படுத்தாது வெறி கொண்டு சாடிக் கொத்தளத்துச் சுவர்களின் மீது ஏறியது. இம்முயற்சியிலீடுபட்ட வெள்ளைத் தளபதி ஒருவன் நம் வீரர்களால் தொடையில் குறி பார்த்துச் சுடப்பட்டு வாழ்க்கைக்குப் பயனற்றவனாக்கப்பட்டான். கொத்தளங்களைக் கைப்பற்றிய பட்டாளம் தன்னை இரு பிரிவுகளாகப் பிரித்துக்கொண்டு, நம் சிப்பாய்களைப் புடைக்க முந்தியது. ஒரு பிரிவு, இந்தியச் சிப்பாய்கள் நிறைந்திருந்த ஒரு கோட்டைப் பகுதியைத் தாக்குவதைக் குறியாகக் கொண்டது. இன்னெரு பிரிவு, வேலூர்க் கோட்டையின் கீழ்த்திசையிலிருந்த தலை வாயிலைக் கைப்பற்றுவதில் கவனம் செலுத்தியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:1806_(ந._சஞ்சீவி).pdf/23&oldid=1138048" இலிருந்து மீள்விக்கப்பட்டது