பக்கம்:1806 (ந. சஞ்சீவி).pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

1806



தியது. இக்கடுமுயற்சியில் ஈடுபட்ட வெள்ளைப் பட்டாளம் சுதந்தர வீரர்களால் சுட்டுப் பொசுக்கப்பட்டது. கோட்டை வாயிலை அணுகிய வெள்ளைப் படைகள் தலைவாயிற்கதவுகள் தாளிடப்பட்டுப் புரட்சி வீரர்களின் பலம் பொருந்திய பீரங்கிகளால் பாதுகாக்கப்பட்டிருப்பதை அறிந்தனர். ஆம், சுதந்தரச் சிப்பாய்களின் நோக்கமெல்லாம் கோட்டைக்கு வெளியே இருந்து பகைவர் யாரையும் உள்ளே வரவிடாமல் தடுப்பதும் கோட்டைக்குள்ளே இருந்த வெள்ளையரை அங்கேயே சுட்டுச் சாம்பலாக்குவதுந்தான். கோட்டைக் கதவுகளை வெள்ளைப்பட்டாளம் நெருங்காத வண்ணம் கடும்போர் புரிந்தார்கள் இந்தியச் சிப்பாய்கள். போரில் வெள்ளையர் பலர் உயிரிழந்தனர்.

கொடிப்போர் : வெள்ளைப்பட்டாளம் கோட்டையின் ஆயுதச்சாலையை அடுத்தபடியாகத் தாக்கத் துடித்தது. ஆனால், குண்டுகளை எல்லாம் இழந்து வெறுங்கையோடு நின்ற பட்டாளத்தால் ஆகும் காரியமா அது? எனவே, எப்படியாவது துப்பாக்கிக் குண்டுகள் சேமித்து வைக்கப்பெற்றிருக்கும் கொட்டிலையும் கோட்டையின் புற அரணையும் கொத்தளத்தின் ஒரு பகுதியையும் பொருட்களஞ்சியத்தையும் கைப்பற்ற முடிவு செய்தது பறங்கிப் பட்டாளம். அம்முயற்சியில் ஏகாதிபத்திய வெறியர் பலர் மாண்டு மடிந்தனர். ஒருவாறு பலத்த சேதத்திற்குப்பிறகு, எடுத்த முயற்சியில் வெற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:1806_(ந._சஞ்சீவி).pdf/24&oldid=1138519" இலிருந்து மீள்விக்கப்பட்டது