பக்கம்:1806 (ந. சஞ்சீவி).pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேலூர்ப் புரட்சி

27



வதே. இந்நோக்குடன் தென்னகத்தில் பல்வேறு பகுதிகட்கும் அனுப்பப் பெறுவதற்குப் புரட்சிக் கடிதங்கள் தயாராய் இருந்தன. ஏன்? ஏற்கெனவே அனுப்பப்பட்டும் இருந்தன.

மேலும், பின்னாளில் புரட்சி பற்றி நடை பெற்ற விசாரணையின் விளைவாகத் திடுக்கிடும் உண்மைகள் சில வெளியாயின. அவற்றுள் சில வருமாறு : புரட்சி வீரர்கள் கோட்டையைக் கைப்பற்றிக் குறைந்தது எட்டு நாட்களேனும் தங்கள் ஆட்சியில் வைத்திருக்க வேண்டும். இடை வேளையில் திப்புவின் அரசிளங்குமரன் பத்தாயிரம் வீரர்களைப் போர்க்கருவிகளுடன் நாட்டின் பல்வேறு பகுதிகளினின்றும் திரட்ட வேண்டும். சிறப்பாக மைசூர் மக்களின் துணையை நாட வேண்டும். வேலூர்க்கோட்டையும், பேட்டையும் பிடிபட்டவுடன் இந்திய இராணுவத்தினிடையே ஏற்படக்கூடிய பேரதிர்ச்சியைப் பயன்படுத்தி ஆங்கில அதிகாரத்தைச் சீர்குலைக்க வேண்டும். இவ்வாறெல்லாம் திட்டமிட்ட புரட்சி வீரர்கட்கு ஏற்கெனவே இராணுவப் பயிற்சி பெற்று ஓய்வு பெற்றிருந்த பலர் துணை புரிய வாக்களித்தனர். வேலூர்க்கோட்டையை அடுத்திருந்த பேட்டை மக்களுள் பல்லாயிரவர் புரட்சி வீரர்களின் கட்டளை கிடைத்ததும் சுதந்தர தேவிக்குத் தம் தலைகளை காணிக்கையாக்கக் காத்திருந்தனர்.

குடியைக் கெடுத்த குடி! இவ்வளவு திடமிடப் பெற்றிருந்தும், புரட்சி வீரர்களின் முதல் இந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:1806_(ந._சஞ்சீவி).pdf/29&oldid=1138819" இலிருந்து மீள்விக்கப்பட்டது