பக்கம்:1806 (ந. சஞ்சீவி).pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேலூர்ப் புரட்சி

29



கோட்டையைக் கைப்பற்றுவதில் போதிய கவனம் காட்டவில்லை. மூன்றாவது காரணம், எதிர்பார்த்த அளவிற்குத் திப்புவின் குமாரர்கள் துணிந்து முன்வந்து சுதந்தர வீரர்களின் அணி வகுப்பிற்குத் தலைமை தாங்கத் தயங்கினமை. நான்காவது காரணம், நினைக்குந்தோறும் நம் மனத்தில் வெட்கத்தையும் வேதனையையும் வெறுப்பையும் நெருப்பென அள்ளிக்கொட்டுவதாகும். வேலூர்ச் சிப்பாய்களில் பெரும்பாலோர்க்கு இருந்த சுதந்தர உணர்ச்சிக்கு உலை வைக்கக் கோட்டைக்குள்ளேயே சில கருங்காலிகள் இருந்தார்கள். அதைக்காட்டிலும் புரட்சியை அடக்க வெள்ளையர்க்கு உதவியாக ஆர்க்காட்டிலிருந்து வந்த இந்தியக் கூலிப்பட்டாளமே பேருதவி புரிந்தது. ஆம்! ஒரு புறம் நம்மவரின் அனுபவக் குறைவும், ஒரு சிலரின் துரோகப் புத்தியும்,-மற்றாெரு புறத்திலே அனுபவ நிறைவும், ஆயுதப் பெருக்கமும்- இவை இரண்டிற்கும் இடையே சுதந்திர வீரர்களின் ஆன்மபலம் தாற்காலிகமாகத் தோல்வியுற்றது. என்றாலும், இறுதி வெற்றி தேச பத்தர்களிடமே சரண் புகுந்தது. இந்தியநாடு இன்று சுதந்தர நாடாய் விளங்குவதே-காந்தி அடிகள் போன்ற மாண்பு மிக்க மனித குலமாணிக்கங்கள் பிறந்தமையே-இவ்வுண்மையை மெய்ப்பிக்குமன்றோ :

அடக்குமுறை: வேலூர்ப் புரட்சி கொடுமையான அடக்குமுறையால் நசுக்கப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:1806_(ந._சஞ்சீவி).pdf/31&oldid=1138821" இலிருந்து மீள்விக்கப்பட்டது