பக்கம்:1806 (ந. சஞ்சீவி).pdf/45

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுடரும் சோதியும்

43



கொள்ளையடிப்பதற்கென்றே கொடியுயர்த்திய கூட்டத்தைச் சின்னபின்னமாக்கின,வேலூர்ப் புரட்சி வீரர்கள் வீசிய வெடிகுண்டுகள். அம்மட்டோ! கோட்டைக்கொடி மரத்திலே பறந்துகொண்டிருந்த யூனியன் ஜாக்கும் இறக்கப்பட்டது; அயற்கொடி பறந்த இடத்தில், அவ்வமயம் வேலூர்க் கோட்டையில் காவலில் வைக்கப்பட்டிருந்த மாவீரன் திப்புச் சுல்தான் மைந்தர்களின் துணையால் கிடைத்த இந்தியக் கொடி ஆடிப்பறந்தது. புரட்சி தொடங்கியவுடனே கோட்டை முழுவதையும் தமிழ் வீரர்கள் தங்கள் வசமாக்கினார்கள்; ஏகாதிபத்தியத்தின் ஆட்சிக்குட்பட்டிருந்த கோட்டையில், பறங்கியரால் சேர்த்துப் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த இராணுவத்தளவாடங்களையும் மருந்துக் கிடங்குகளையும் கண்மூடிக் கண் திறப்பதற்குள் தங்கள் உடைமைகளாக்கிக்கொண்டார்கள் புரட்சி வீரர்கள். இந்திய மண்ணில் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வேலூர்க் கோட்டையில் ஆரம்பமாகிய இராணுவப்புரட்சியின் சார்பில் வெடிக்கப்பட்ட குண்டுகளின் பேரொலி எழுந்த நான்கு மணி நேரத்திற்குள், வேலூர்க்கோட்டையிலிருந்த வெள்ளைத் துரைமார் அனைவரும் குற்றுயிராகக்கப்பட்டனர். அந்நிலையில் அது சமயம் வேலூரிலிருந்து பதினாறு மைல் தொலைவிலுள்ள ஆற்காட்டில் முகாமடித்திருந்த கர்னல் கில்லெஸ்பிக்கு செய்தி பறந்தது. அவன் தன் கீழிருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:1806_(ந._சஞ்சீவி).pdf/45&oldid=1138888" இலிருந்து மீள்விக்கப்பட்டது