பக்கம்:1806 (ந. சஞ்சீவி).pdf/46

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

1806



சுதேசிப் பட்டாளத்தின் துணைகொண்டும், வேலூரில் மலைமேலுள்ள கோட்டையில் ஓடி ஒளிந்திருந்த வெள்ளைச் சிப்பாய்களின் துணை கொண்டும், பேய்வாய்ப் பீரங்கிகளின் துணை கொண்டும் பெருமுயற்சி செய்து, புரட்சி வீரர்களால் அடைக்கப்பட்டிருந்த வேலூர்க் கோட்டைக்கதவுகளைப் பிளந்து எறிந்து, உள்ளே நுழைந்தான். காலைப் பத்து மணிக்கெல்லாம் வேலூர்க் கோட்டை கொலைக்களமாயிற்று! ஏகாதிபத்திய வெறியர்கட்கும் சுதந்தர வேட்கையினர்க்குமிடையே நேருக்கு நேர் போர் நடைபெற்றது. அந்தோ! அப்பொழுது நிகழ்ந்த பயங்கரக் காட்சிகளை யாரால் சித்திரித்துக் காட்ட இயலும்? சுதந்தர வீரர்கள், இராணுவ பலம் மிக்க வெள்ளைப் படைகளாலும் அவர்களுக்குத் துணையாக ஆர்க்காட்டிலிருந்து வந்த சுதந்தர உணர்ச்சியற்ற சுதேசிப் பட்டாளத்தாலும் சுட்டுப் பொசுக்கப்பட்டார்கள். அதன் விளைவாக வேலூர்க் கோட்டை வீர மாந்தரின் தியாக இரத்தத்தால் நனைக்கப்பட்டுப் புனித பூமியாயிற்று. வேலூர்க் கோட்டையில் நடைபெற்ற புரட்சி நெடுங்காலமாகத் திட்டமிடப்பட்ட புரட்சிதான் ; அக்கோட்டையிலே காவலில் வைக்கப்பட்டிருந்த மைசூர் மன்னர் பரம்பரையினராலும், கோட்டைக்கு வெளியே இருந்த பேட்டை மக்களாலும் ஆதரவளித்து உருவாக்கப் பெற்றதுதான். என்றாலும், அப்புரட்சி தோற்றதற்குக் காரணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:1806_(ந._சஞ்சீவி).pdf/46&oldid=1138927" இலிருந்து மீள்விக்கப்பட்டது