சுடரும் சோதியும்
47
களை ஏற்றுமதி செய்வது ஒரு முக்கிய கூறுபாடாய் இருந்தது. ஆனால், வேலூர்ப்புரட்சி நடைபெற்ற காலத்தில் இந்த நிலை சிறிதும் இல்லை; மேலும், வடவிந்தியப் பெரும்புரட்சி நடைபெற்ற காலத்தில் நாட்டில் அமைக்கப்பட்டிருந்த பலம் பொருந்திய போக்குவரவு சாதனங்களாகிய இரயில்வே, தந்தி, தபால் முதலியன இல்லை. எனவே, இந்தியச்சிப்பாய்களின் பெரும்புரட்சிக் காலத்தில் அப்புரட்சி நாட்டின் பல்வேறு பாகங்களிலும் பரவி, பெரியதொரு தேசிய எழுச்சியாக உருக்கொண்ட இந்தச் சூழ்நிலை வேலூர்ப் புரட்சி தோன்றிய காலத்தில் சிறிதும் இல்லை.”
இவ்வாறு பாரதத்தின் தெற்கேயும் வடக்கேயும் நடைபெற்ற இருபெரும்புரட்சிகளைப் பற்றியும் ஒப்பு நோக்கி ஆராயும் வரலாற்று அறிஞர் ஹரிபாத சௌதிரி அவர்கள், தம் கட்டுரையின் முதலிலும் முடிவிலும் ஐயந்திரிபின்றிக் கூறும் உண்மை ஒன்று உண்டு. அது 1857க்கு வித்திட்டது 1806ல் நடைபெற்ற வேலூர்ப்புரட்சி என்பதே.
முடிவுரை இவ்வாண்டு ஆகஷ்டு 15ல், வடவிந்தியாவில் நடைபெற்ற இந்தியச் சிப்பாய்களின் பெரும்புரட்சியின் நூற்றாண்டு விழாக் கொண்டாடப்படுகிறது. அப்புரட்சி விழாவிலே பாரத மக்கள் என்ற முறையில் மகிழ்ச்சியோடு கலந்துகொள்ளும் நாம், அப்புரட்சிக்கு