பக்கம்:1806 (ந. சஞ்சீவி).pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1806



1



வேலூர்ப் புரட்சி

1806-ஆம் ஆண்டு மூண்ட வேலூர்ச் சிப்பாய்களின் புரட்சியும் சுதந்தர தாகத்தையே மூலகாரணமாகக் கொண்டது. பின்னர் ஏற்பட்ட முதலாவது சுதந்தரப் போருக்கு அது ஒர் ஒத்திகை'.

—வீர சவர்க்கார்

'இந்தியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராய் வளர்ந்து வந்த பெருவெறுப்பு முதல் முதலாக மக்கள் எழுச்சியாய் வெளிப்பட்டது. 1806-ஆம் ஆண்டு வேலூர்ப் புரட்சியே 1857-ஆம் ஆண்டு நடை பெற்ற இந்தியச் சிப்பாய் புரட்சியின் முன்னோடியாய் விளங்கியது. உண்மையில் 1857-ஆம் ஆண்டின் இந்தியச் சிப்பாய் புரட்சியின் சிறிய வடிவமே வேலூர்ப் புரட்சி.

—ஹரிபாத செளதிரி

இந்தியச் சிப்பாய்களின் பெரும்புரட்சி மூண்டெழுவதற்கு அரை நூற்றாண்டிற்கு முன்பே இன்பத் தமிழகத்தின் தலை வாயிலில் நடைபெற்ற முதல் இந்திய இராணுவப் புரட்சியே வேலூர்ப் புரட்சி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:1806_(ந._சஞ்சீவி).pdf/6&oldid=1122973" இலிருந்து மீள்விக்கப்பட்டது