இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
134
FAMILIAR DIALOGUES IN
DIALOGUE II
௨-ம்.சம்பாஷணை.
BEFORE GOING TO BED AND AFTER ONE IS IN BED.
ஒருத்தர் படுக்கைக்குப் போகு முன்னும் படுக்கைக்குப் போன பின்பும்.
It grows dark.
இருட்டிப் போகுது.
It is very late.
வெகு நேரமாயிற்று.
It is time to go to bed.
படுக்கைக்குப் போற வேளையாயிற்று.
Drowsiness comes on.
தூக்கம் பகட்டுது.
You come home very late.
நீர் வெகு நேரமான பொழுது வீட்டுக்கு வந்தீர்.
They sit up till mid night.
அவர்கள் பாதியிராத்திரி மட்டும் விழித்துக் கொண்டிருந்தார்கள்.
You go to bed before sun-set.
சூரியன் அஸ்தமிக்கு முதலே படுக்கைக்குப் போகிறீர்.
The sleep overtakes me.
என்னைத் தூக்கம் வந்த மட்டுகுது.
I was disturbed in my sleep.
தூக்கங் கெட்டுப் போனேன்.
Rise and go to bed.
எழுந்து படுத்துக் கொள்ளப் போம்.
I had a restless night.
இராத்திரி தூக்கங் கெட்டேன்.
You are a sleepy fellow.
நீ தூங்கு மூஞ்சி.
Why do you call me so.
நீர் ஏன் என்னை யப்படி யழைக்கிறீர்
Have you made my bed?
என் படுக்கையைப் போட்டீரா?
Is my bed made?
என் படுக்கையைப் போட்டாயிற்றா?
Give me a night Cap.
எனக்கு இராவிற் போடுகிற குல்லாவைக் கொடு.
Undress yourself or pull of your clothes.
உம்முடைய உடுப்பைக் கழட்டிப் போடும்.
Take away the Candle.
வத்தியையலித்துப் போடும்.
I love to read in bed.
நான் படுக்கையிற் படிக்கிறதற்குக் சம்மதிக்கிறேன்.
Put out the Candle.
வத்தியையலித்துப் போடும்.
Do not fail to awake me early in the morning.
அதிகாலமே யென்னை யெழுப்புகிறதற்குத் தவறிப் போகாதேயும்.
Light a Candle.
ஒரு வத்தியைக் கொளுத்தும்.
Have you brought the tinder box.
சக்கிமுக்கிக் குடுக்கையைக் கொண்டு வந்தீரா?