பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

FAMILIAR DIALOGUES IN

What time do you use to rise at?
நீரெந்நேரத்துக்கு எழுந்திருக்கிற வாடிக்கை?
At seven o'Clock,
ஏழு மணிக்கு.
What o'Clock is it now?
இப்பொது எத்தனை மணி?
It's almost ten,
பத்து அடிக்கிற சமீபமாயிற்று.
I went to bed very late,
வெகு நேரமான பொழுது படுத்துக் கொள்ளப் போனேன்.
I got not a wink of sleep all last night.
இராத்திரி முழுதும் எனக்கு ஒரு சிமிட்டு தூக்க முதலாயிராமற் போயிற்று.
If you won't rise, I'll pull off your bed cloth,
நீரெழுந்திருக்கா விட்டால் உம்முடைய படுக்கையுடுப்பைப் பிடுங்கிப் போடுவேன்.
Here? I am rising, Good morrow t'ye, Sir.
இதோ நானெழுந்திருக்கிறேன். உமக்குக் காலவந்தனமையா.

DIALOGUE IV
௪-ம்.சம்பாஷணை.

To DRESS ONE’S SELF.

ஒருத்தர் உடுத்திக் கொள்ளுகிறது.

Dress yourself,
நீர் உடுத்திக் கொள்ளும்.
Boy, light a Candle,
பையா ஒரு வத்தி கொளுத்து.
Put on your clothes,
உம்முடைய உடுப்பை யுடுத்திக் கொள்ளும்.
Comb your head,
உம்முடைய தலையை வாரிக் கொள்ளும்
Where is the comb?
சீப்பு எங்கே?
You will find it on the table behind the looking glass,
கண்ணாடிக்குப் பின்னாலேயிருக்கப் பட்ட மேசையின் பேரிலிருக்கும் பார்.
The combs are not clean Lend me your Ivory comb,
சீட்புகள் சுத்தியாயில்லை. உம்முடைய தந்த சீப்பை யிரவலாய்க் கொடும்.
I must wash my hands, my mouth and my face,
நான் என் கைகளையும் வாயையும் முகத்தையும் கழுவ வேணும்.
Call the maid-servant immediately,
வேலைக்காறியை இச்சிணத்திலே கூப்பிடும்.