இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ENGLISH AND TAMIL.
137
Give me a little soap
எனக்கு கொஞ்சஞ் சவுக்காரங் கொடு.
My hands were very dirty,
என் கைகள் மெத்த அசுத்தமா யிருக்குது.
Give me the handkerchief that is in my Coat pocket,
என்னுடைய கோட்டுச் சட்டைச் சாக்கிலிருக்கிற லேஞ்சு குட்டையைக் கொடு.
I gave it to the washerwoman, it was foul,
அழுக்காயிருக்குதென்று வண்ணாத்திக்குப் போட்டு விட்டேன்.
Has she brought all my clothes?
என்னுடைய உடுப்பெல்லாங் கொண்டு வந்தாளா?
Yes, Sir, There wants nothing
ஆமையா, இனி வர வேண்டியதொன்றுமில்லை.
Give me the suit of clothes I had on yesterday,
நேத்து போட்டிருந்த திஸ்து உடுப்பைத் தாரும்.
Won't you put on your new suit of clothes?
நீரும்முடைய புது திஸ்து உடுப்பைப் போட்டுக் கொள்ளுகிறதில்லையா?
Truly, I had forgot it,
மெய்யாகவே நான் மறந்து விட்டேன்



DIALOGUE V
௫-ம்.சம்பாஷணை.
TO VISIT IN THE MORNING.
காலமே சந்திக்கிறது.
Who is there?
ஆரங்கே?
A friend, open the door.
சிநேகிதன்தான் கதவை திற.
Where's your master?
உம்முடைய துரையெங்கே?
He is in bed.
அவர் படுத்துக் கொண்டிருக்கிறார்.
Is he asleep still?
அவரின்னந் தூங்குகிறாரா?
He is up.
அவரெழுந்தார்.
How now! are you in ! bed still?
இப்போ எப்படி நீரின்னம் படுத்துக் கொண்டிருக்கிறீரா?
I went to bed so late last night, that I could not get up early,
இராத்திரி நான் வெகு நேரமான போது படுக்கைக்கு போனதினாலே சீக்கிரமா யெழுந்திருக்கக் கூடவில்லை.