பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ENGLISH AND TAMIL

139

No, Sir, I don't care to eat meat in the morning, but bread and butter is sufficient for me,
காலமே நான் இறைச்சி சாப்பிட வேண்டிய அவசரமில்லை, ஆனால் றொட்டியும் வெண்ணையும் எனக்குப் போதும்.
Take a chair and sit down,
ஒரு நாற்காலி போட்டுக் கொண்டு உளுக்காரும்.
Do you love poached eggs?
வேவித்த முட்டை உமக்குச் சம்மதியா?
Eat new laid eggs.
புதுசாயிட்ட முட்டை சாப்பிடும்.
You don't eat.
நீர் சாப்பிடவேயில்லை.
I have eat so much,that I shall not be able to dine,
பகல் சாப்பாடு தேவையில்லாமலிருக்கத் தக்கனதாய்ச் சாப்பிட்டேன்.
You only jest, you have eat nothing at all,
நீரொன்றுஞ் சாப்பிடவேயில்லை,சும்மா பரியாசம் பண்ணுகிறீர்.

DIALOGUE VII
௭-ம். சம்பாஷணை.

OF DINNER.

மத்தியான போசனத்துடனே சேர்ந்தது.

I believe it is near dinner time,
மத்தியான சாப்பாட்டு வேளை சமீபித்துதென்று நிட்சயிக்கிறேன்.
ls it dinner time?
இது மத்தியான சாப்பாட்டு வேளையா?
Yes, it is time to go to dinner.
ஆம், இது மத்தியான சாப்பாட்டுக்குப் போற வேளை.
At what o'clock, do you go to dinner?
நீரெத்தனை மணிக்கு மத்தியான போசனத்துக்குப் போகிறது?
At two O'Clock,
இரண்டு மணிக்கு.
Pray take a dinner with us today.
இன்றைக்கு நீர் யெங்களோடே கூட பகலசனம் பொசிக்க மன்றாடுகிறேன்.
Bring the Table cloth, Spread it on the Table,
மேசை துப்பட்டியை கொண்டு வா. அதை விரித்து மேசையின் மேல் மூடு.