பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ENGLISH AND TAMIL.

141

I have read the Dutch Gazette, which speaks of nothing but War.
நான் ஒலாந்தக்காறர் செய்தி காகிதங்களை வாசித்தேன். அதிலே சண்டை தவிர மற்றதொன்றுஞ் சொல்லவில்லை.
What do they say of the Princes of the North?
வடக்கத்தி ராசாக்கள் சமாச்சாரம் என்ன சொல்லுகிறார்கள்?
How goes the affairs between the King of England and the King of France?
இங்கிலிஷ் தேசத்து ராசாவுக்கும் பிராஞ்சு தேசத்து ராசாவுக்கு மிருக்கப்பட்ட காரியங்க ளென்னமாயிருக்குது?
The reports are various in all places, some say they are on friendly terms, others say they are jealous of each other
எல்லாவிடத்திலும், பல விதமாய் சொல்லுகிறார்கள் சிலர் அவர்கள் நன்றா யொருமித்திருக்கிறார்களென்றுஞ் சொல்லுகிறார்கள், சிலர் அவர்கள் ஒருவருக்கொருவர் பகையாயிருக்கறார்களென்றும் சொல்லுகிறார்கள்.

DIALOGUE IX
௯-ம். சம்பாஷணை.

OF GOING UPON THE WATER.

தண்ணீரின் மேல் போகிறதற்கானது.

What shall we do to day?
நாமின்றைக்கென்ன செய்யலாம்?
Come let us go to Ennore.
நாம் இரணாவூருக்குப் போவோம் வாரும்.
What shall we go and do at Ennore?
நாம் யிரணாவூரிலே போய் என்ன செய்வோம்?
Let us go there for fishing,
நாம் அங்கே மீன் வேட்டையாடப் போகலாம்.
Call the boat men,
படகுக்காரரைக் கூப்பிடு.
They are ready here,
அவர்களிங்கே ஆயத்தமாயிருக்கிறாகள்.