பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



144

FAMILIAR DIALOGUES IN

Can you get a new horse at least?
கடைசியா யெனக்கொரு புது குதிரையாவது அகப்படுமா?
Not even a horse sir
ஒரு குதிரை முதலாய் அகப்படாதையா.
Then how are we to go to Nellore?
அப்படியானால், நாமெப்படி நெல்லூருக்கு போகிறது?
I can get you a Palankeen with a set of Bearers.
நாநுங்களுக்ககொரு பல்லாக்கு ஆட்களோடே கூடக் கொண்டு வருவேனையா.
Better do so,
அப்படியே செய்தால் நேத்தி.
Here are the bearers & Palankeen ready sir,
ஆட்களும் பல்லக்கு மிதோ தயாராயிருக்குதையா.
What are we to do with our carriage and horses?
நம்முடைய ரதத்தையுங் குதிரைக்ளையும் என்ன பண்ணுவோம்?
You had better commit them to the charge of the Pulicat Zamindar until your return.
நீர் வருகிற மட்டுக்கும் அதுகள் பழவேர்க்காட்டு சமின்தாரண்டை ஒபபுவிக்கிறது உத்தமம்.
Ask these Palankeen bearers what will they require to convey us from hence to Nellore?
இங்கேயிருந்து நாம் நெல்லூர் மட்டும் போகிறதற்கு என்ன கேழ்ப்பார்களென்று பல்லக்குக்காரர்களைக் கேள்.
They say that they will not engage themselves unless you pay them the sum of fifty rupees.
நீர் மொத்தமாக அன்பது ரூபாய் குடுத்தாலொழிய, அவர்கள் உள்படமாட்டார்களென்று சொல்லுகிறார்கள்.
Are there any Choultries or Inns in the roads?
வழிகளிலே சத்திரங்களாவது சாவடிகளாவதுண்டா?
There are three or four Inns with good accommodations for Gentlemen travelling.
வழிப்பயணம் போகிற துரைகளுக்கு மூணு அல்லது நாலு வசதியான சத்திரங்களுண்டு.