பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



150

FAMILIAR DIALOGUES IN

who departed this life, with the Complaint of Cholera,
அவர் முன்னதாகவே ஆஸ்திபந்தனாயிருக்கிறார்.
God bless and preserve his life for hundred years in more to furnish coffins to those who are still existing.
இன்னம் உயிரோடிருக்கிற பேர்களுக்கு சாவுபெட்டி பண்ணும்படியாக பின்னும், ௱-வருஷ மதிகமாய்ச் சீவித்திருக்க ஆண்டவர் அவரை ஆசீர்வதித்துக் காப்பாற்ற வேணும்

DIALOGUE XII
௰௨-ம். சம்பாஷணை.

BETWEEN A GENTLEMAN AND A TAYLOR.

ஒரு துரைக்கும் தையல்காரனுக்கும்.

Taylor you must make me a suit of clothes,
தையல்காறனெ நீயென்க்கொரு திஸ்து உடுப்பு தைக்க வேணும்.
Sir, I am always ready to serve you,
நான் யெப்போது தங்களுக் கூழியஞ் செய்ய ஆயத்தமா யிருக்கிறேனையா.
Go and get me various fine Musters of cloths,
எனக்குப் பல வித நாணையத் துணி மாதிரிகளைப் போய்க் கொண்டு வா.
Shall l get them from the Shops or of Native Merchants?
நான் அதுகளை ஷாப்புகளிலிருந்து கொண்டு வரட்டுமா அல்லது உள்ளூர் வற்தகர்களண்டையிலிருந்து கொண்டு வரட்டுமா?
Do as you please,
உன் மனசு பிறகாரஞ் செய்.
I shall come this evening with various musters of the cloth you require,
இன்று சாய்ந்திரந் தங்களுக்கு வேண்டிய பல வித துணி மாதிரிகள் கொண்டு வருகிறேன்.
Very well, do so,
நல்லது அப்படியே செய்.
Peon, what is Master doing?
சேவகனே துரை யென்ன செய்கிறார்?
He is just gone to bed,
அவரிப்பொழுது தான் படுத்துக் கொள்ளப் போனார்.
Who is there at the door making noise?
ஆரங்கே கதவண்டை சந்தடி பண்ணுகிறது?