இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ENGLISH AND TAMIL.
151
I am Sir, your servant, the Taylor,
நான்தானையா தங்கள் வேலைக்காறனாகிய தையல்காரன்.
Well, Taylor, have you brought musters?
நல்லதுத் தயல்காரனே நீ மாதிரிகளைக் கொண்டு வந்தியா?
Yes Sir, here they are,
ஆமையா இதோயிருக்குது
Ah! this will answer my purpose
ஆ! இதுயெனக்குதவும்.
Will you be pleased to buy the cloth, or shall I buy it myself?
நீங்களே மனம் பொருந்தி பிடவையை வாங்கிறீர்களா அல்லது நானதை கொள்ளட்டா?
I am going to buy it along with you,
நான் உன்னோடே கூட வந்து வாங்கப் போகிறேன்.
Are you coming to Shops, or to the Native Merchants?
நீர் ஷாப்புகளுக்கு வருகிறீரோ அல்லது உள்ளூர் வற்தகர்களண்டைக்கு வருகிறீரோ?
Let us go to the nearest place.
நாம் கிட்டயிருக்கப்பட்ட இடத்துக்குப் போவோம்.
The Nearest place for us is just the next door,
நமக்கு கிட்ட மாயிருக்கப்பட்ட இடம் அண்டை வீடுதான்.
I see Taylor, you are playing a Joke with me,
தையல்க்காறனே நீ என்னுடனே சக்கட்டம் பண்ணுகிறதுப் போல் காணுது.
Excuse me Sir,
என்னை மன்னியுமையா.
I find my good Taylor you are a little impertinent.
என் பிறியமுள்ள தையல்காறனே நீ கொஞ்சம் ஆங்காரியென்று எனக்குக் காணப்படுது.
Taylor you better go home.
தையல்காரனே நீ வீட்டுக்குப் போனால் தாவிளை.
Very well sir, I shall wait at home,
நல்லதையா நான் வீட்டண்டையில் கார்த்திருக்கிறேன்.
Show me the best thing you have my good Merchant.
என் பிறியமுள்ள வியாபாரியே உன்னண்டையிலிருக்கிற சரக்கில் நேத்தியானதை எனக்குக் காண்பி.
See whether this will please you?
இது உங்களுக்கு இஷ்டப்படுமாவென்று பாரும்?