பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/158

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

152 FAMILIAR DIALOGUES IN

It is good, but I do approve of the Texture = இது நன்றாயிருக்குது ஆகிலும் நெசவு எனக்கு நேத்தியானதாய்த் தோற்றவில்லை


Look upon that cloth in the light, and it will suit your fancy, = நீங்கள் அந்தப்பிடவையை வெளிச்சத்திலே பாரும் அது உங்களுக்குச் சரிப்படும்


I like this cloth but it will not last long = எனக்கிந்தபிடவை சம்மதியாயிருக்குது ஆனால் நாட்படநிற்காது


Here is another piece, = இதோவேறொருபிடவையிருக்குது


This will answer in my purpose, = இது உன்னுடைய காரியத்துக்குதவும்


How much do you ask for it ? = இதுக்கு நீர்யெவ்வளவு கேட்கிறீர்


How do you sell a yard? = கெசம்யென்னமாகவிற்கிறீர்


The lowest price is 2 Rupees a yard. = குறைந்தவிலை கெசம் , ஒண்ணுக்கு ரெண்டுரூபாய்,
 
That is too much, = அதறொம்பவும் அதிகமாயிருக்குது


You do not consider the quality and fineness of the cloth, = நீர்பிடவையினுடைய குணத்தையும் நாண்யத்தையும் யோசிக்கவில்லை


This cloth will wear well, = இந்தபிடவை உடைதாளும்


Merchants are never are never wanting in praising their commodities = வற்தகர்கள் தங்கள் சரக்குகளைப்புகழுகிறதற்கு சொல்லவேண்டியதில்லை,


I assure you this cloth is worth 20 Rupees = இந்தபிடவை,௨௰, ரூபாய் பெறுமென்று உமக்கு நிட்சயமாய்ச் சொல்லுகிறேன்,


I am not used to Haggle, = விலைக்காகப் போராடுகிறதற்கு எனக்குவழக்கமில்லை


Tell me your last word, = உன்னுடைய கடைசி வாற்தையை எனக்குச் சொல்லும்


I told you sir, it is worth so much, = அது இவ்வளவு பெறுமென்று தங்களுக்குச்சொன்னேனையா,


What will you offer me for it? = அதுக்கு நீரெனக்கென்ன கொடுப்பீர்


I will give you 18 Rupees for it = அதுக்கு ௰௮ ரூபாய் தருகிறேன்