இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ENGLISH AND TAMIL.
153
That is too little,
அது மெத்த கொஞ்சம்.
I cannot .abate a single fanam from 20 Rupees,
இருபது ரூபாய்க்கு ஒரு சின்னப் பண முதலாய் குறைய மாட்டேன்.
That is too dear,
அது மெத்தவுங் குறைச்சலாயிருக்குது.
I assure you, I sell it for the same Price I bought it for,
நான் உங்களுக்கு நிச்சயத்தை சொல்லுகிறேன். நான் கொண்ட விலைக்கே தங்களுக்கு விற்கிறேன்.
If you please cut it out and give,what I want of it
தயவு பண்ணி எனக்கு வேண்டிய மட்டுக்கும் அதிலே வெட்டிக் கொடும்.
How much must you have of it?
இதிலே உமக்கெவ்வளவு வேண்டியது?
Ask my Taylor,
என் தையல்காறனைக் கேள்.
He is gone home long ago,
அவன் முன்னமேதானே வீட்டுக்குப் போய் விட்டான்
I must have three yards for the Coat and two yards and a quarter for the waistcoat and Breeches,
எனக்குக் கோட்டுக்கு மூணு கெசமும், வாஸ்கட்டுக்குங் குள்ள கால்சட்டைக்கும் ரெண்டே கால் கெசம் வேண்டியது.
Send for my Taylor immediately.
இப்போதானே என் தையல்காரனை அழைத்தனுப்பு.
Here he is come Sir.
இதோ அவன் வந்திருக்கிறானையா.
Will this do for me?
இது எனக்குப் போதுமா?
Tell him to cut fifteen yards out of it,
அதிலே பதினைஞ்சு கெசம் அவரை அறுக்கச் சொல்லும்.
How much does that amount to ?
அது என்ன கிறையமாயிற்று?
Thirty Pagodas,
முப்பது வராகன்.
Here,there is your money see whether I have mis-reckoned, for I would not wrong you of a fanam
இதோ உன் பணத்தைத் தப்பிதமா யெண்ணினேனோ என்னமோவென்று பார்த்துக் கொள். ஏனென்றால், ஒரு பணமாகிலும் உன்னை மோசம் பண்ண மாட்டேன்.
Sir, the money is right.
இந்தப் பணஞ் சரிதானையா.