பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/160

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

154 FAMILIAR DIALOGUES IN

Remember Taylor that I must have my suit of clothes for Sunday = தையல்காறனே ஞாயறில் என்னுடைய திஸ்து உடுப்பு வேண்டியது ஞாபகமாயிருக்கட்டும்

I promise you, you shall have it without fail = அட்டியில்லாமல் தங்களுக்கு தருவேன்ன்று வாக்குக்கொடுக்கிறேன்

Do not break your word to me = என்னண்டை நீ பேச்சைப் புரட்டாதே

Trust me for once = ஒருதரம் என்னை நம்பும்

Where is my suit of clothes = என்னுடையதிஸ்து உடுப்பெங்கே

It is not made yet = அது இன்னம் ஆகவில்லை

Did you not promise to bring it to me on Sunday = நீ யறை ஞாயறினன்றைக்குச் கொண்டுவருகிறேனென்று எனக்குச் சொல்லவில்லையா

To promise and perform are two things = சொல்லுகிறதுஞ் செய்கிறதும் ரெண்டுகாரியமாயிருக்கிறது

Why do you promise then if you cannot keep your word = உன்சொல்லைக்காப்பாத்தாமற்போனால் நீ என்வாற்தைப்பாடு பண்ணவேணும்
 
I did not expect so much work = இவ்வளவு வேலை கொள்ளுமென்று நான் நினைக்கவில்லை

You have had my clothes a great while = என் உடுப்புகளை நீ வெகுநாளாய் வைத்துக்கொண்டிருந்தாய்

It is true but I have had that of Mr. A's. longer still = அது மெய்தான், ஆனால் ஏ என்கிற துரையுடுப்பை இதுக்குமனேகநாளாய் வைத்துக்கொண்டிருந்தேன்

Have you made your bill = உன்கணக்கைமுடித்துவந்தியா

I have no time = எனக்குச்சமயமில்லை

Go away with you, I will not pay you = நான் பணங் கொடுக்கிறதில்லை நீ போய்விடு