பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/161

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ENGLISH AND TAMIL. 155

DIALOGUE XIII. ௰௩-ம். சம்பாஷணை.

OF A MASTER AND HIS SERVANT. ஒரு துரைக்கும் தன் வேலைக்காரனுக்கும் சேர்ந்தது.

Who is there; = ஆரங்கே

I am your servant sir, = நான் தங்களுடைய ஊழியக்காறனய்யா

Where have you been so long, = நீ இத்தனை நாளா யெங்கேபோயிருந்தாய்

I was employed under Mr. Nick = நான் நிக்கென்ற துரையிடத்தில் உத்தியோகமாயிருந்தேன்

He is dead, l am at present without employ = அவரிறந்து போய்விட்டார் இப்பொழுது உத்தியோகமில்லாமலிருக்கிறேன்

How much did he give you a month = அவருனக்கு மாசமென்ன கொடுத்துவந்தார்

He paid me two pagodas a month = அவர் மாசமெனக்கிரண்டுவராகன் கொடுத்துவந்தார்

Will you be employed again by me = நீ மறுபடியும் என்னிடத்தில் உத்தியோகத்துக்கமருகிறியா

If you will give me the same pay as that gentleman, I will serve you sir. = நீரெனக்கு அந்ததுரை கொடுத்துவந்தசம்பளங்கொடுக்கும்போலாகில் நான் தங்களண்டை சேவிக்கிறேனய்யா

Call to-morrow morning at gun fire = நாளைக் காலமே குண்டு போடுகிற வேளைக்குவா

Who knocks the door = கதவைத்தட்டுகிறதார்

Sir, it is time to get up = அய்யா இது எழுந்திருக்கிறவேளை யாச்சுது

What o'clock is it = இப்போ எத்தனைமணி

Sir it is very late, I think it is about seven o'clock = இப்போ வெகுநேரமாச்சு தையா ஏழுமணி யிருக்குமென்று நினைக்கிறேன்

Why did you not wake me sooner this morning? = இன்று காலமே நீ யென்னை சீக்கிர மாயேன் எழுப்பவில்லை