இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ENGLISH GRAMMAR.
165
Fourth—Verbs from adjectives; as straight, straighten; soft, soften.
நான்காவது—பண்புச் சொல்லில், வினைச் சொல்லுண்டாகுது. ஒழுங்கான, ஒழுங்குப்படுத்துகிறது; மெதுவான, மெதுவு பண்ணுகிறது.
Fifth—Participles from Verbs; as place, placing, placed.
ஐந்தாவது—வினையெச்சம் வினையிலிருந்து உண்டாகுது. அதாவது வை, வைத்து, வைத்தது.
சொற்கள்.
Words divided into classes are called Parts of speech: of which there are nine different kinds, Viz. Article, Noun, Adjective, Pronoun, Verb, Adverb,Conjunction, Preposition and Interjection.
சொற்கள் வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டு, வார்த்தைகளின் பிரிவுகளென்று அழைக்கப்படுகிறவைகள். இவைகளில் ஒன்பது வித்தியாசமான தினுசுகளுண்டு. அதாவது சாரியை, பெயர்ச் சொல், பண்புச் சொல், சுட்டுச் சொல், வினைச் சொல், வினையுரி, கூட்டிணை, முன்னிலை, வியப்புச் சொல்.
First—An Article is a word prefixed to substantives, when they, are common names of things, to point them out, and to show how far their signification extends
முதலாவது—சாரியை யென்பது பெயர்ச் சொல், வஸ்துக்களின் சமுதாயமான பெயரா யிருக்கும் பொழுது, அவைகள் முன் வைக்கப்பட்டு, அவைகளைக் குறிக்கிறதாகும். அவைகளின் வியாற்தி யெவ்வளவு தூரம் பிரிவாகிறதென்று காண்பிக்கிறதாகுமான ஒரு சொல்.
Second—A Noun or Substantive is the name of a Person, Place or thing, conceived to subsist, or of which we have any notion.
இரண்டாவது—பெயர்ச் சொல் என்பது காட்சியினாலாவது, தோற்றத்தினாலாவது இருக்கிறதற்காக எண்ணப்பட்டிருக்கிற வஸ்துவினுடையதாவது, இடத்தினுடையதாவது, மனிதனுடையதாவது பெயராயிருக்கிறது.
Third—A Pronoun is put instead of a Noun, to point out some persons or things.
மூன்றாவது—சுட்டுச் சொல், பெயர்ச் சொல்லிற்குப் பதிலாகச் சில ஆட்களை அல்லது வஸ்துக்களைச் சுட்டும்படியாய் வைத்திருக்கிறது