பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Can a Camel go through the eye of a Needle?

ஒரு ஒட்டகமானது ஊசியின் துவாரத்தில் நுழையக் கூடுமோ?

The child that cries will get milk.

அழுத பிள்ளை பால் பெறும்.

Whereby one will he happy? By agreeing together

எத்தால் வாழலாம்? ஒத்தால் வாழலாம்.

Can one be paid for eating sugar cane?

கரும்பு தின்னக் கூலி கொடுப்பார்களோ?

There is no pleading against power

வலுமைக்கு வழக்கில்லை.

Can one learn a Fish how to Swim?

மீனுக்கு நீச்சுப் பழக்குவாருண்டா?

Will a Tiger eat grass when he is hungry?

புலி பசித்தால் புல்லைத் தின்குமோ?

The Tears of the poor are like a sharp saw

ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளுக் கொக்கும்.

Evil be to him that evil thinks

தீங்கு நினைக்கிறவனுக்கு தீங்கே நேரிடும்.

Familiarity breeds contempt.

அன்னிய உன்னிய சஞ்சரிப்பு அசட்டையைப் பிறப்பிக்கும்.

What is bred in the bone, will never be out of the flesh?

எலும்பில் பிறந்தது சதையை விட்டு நீங்காது.

I lent my money to my friend, I lost my money and my friend.

என் சினேகிதனுக்கு என் பணத்தை கடன் கொடுத்து, என் பணத்தையும், என் சினேகிதனையு மிழந்தேன்.

FINIS.