சிறப்புப்பாயிரம்
௩
அவர்தாம் -
தன்மக னாசான் மகனே மன்மகன்,
பொருணனி கொடுப்போன் வழிபடு வோனே,
யுரைகோ ளாளனோ டிவரென மொழிப.
-இதனானறிக. *
இனியிவர் தன்மை-
அன்னங் கிளியே நன்னிற நெய்யரி,
யானை யானே றென்றிவை போலக்,
கூறிக் கொள்ப குணமாண் டோரே
-இதனானறிக. *
இனிக் கற்பிக்கப் படாதோ ரெண்வகையர்:
மடிமானி பொச்சாப்பன் காமுகன் கள்வ,
னடுநோய்ப் பிணியாள னாறாச் சினத்தன்,
றடுமாறு நெஞ்சத்தவ னுள்ளிட் டெண்மர்,
நெடுநூலைக் கற்க லாதார் எனவிவர்.
இவர் தன்மை -
குரங்கெறி விளங்கா யெருமை யாடே,
தோணி யென்றாங் கிவையென மொழிப.
-இதனானறிக.
இவருட்களங்கடியப்பட்டார்.
மொழிவ துணராதார் முன்னிருந்து காய்வார்,
படிறுபல வுரைப்பார் பல்கா னகுவார்,
திரிதரு நெஞ்சத்தார் தீயவை யோர்ப்பார்,
கடியப் பட்டா ரவையின் கண்.
இனிக்கோடன் மரபு;
கோடன் மரபு கூறுங் காலைப்
பொழுதொடு சென்று வழிபடன் முனியான்,
முன்னும் பின்னு மிரவினும் பகலினு,
மகலா னாகி யன்பொடு புணர்ந்தாங்,
காசற வுணர்ந்தோன் வாவென வந்தாங்,
கிருவென விருந்து★ சொல்லெனச் சொல்லிப்,
போவெனப் போகி நெஞ்சு களனாகச்,
செவிவா யாகக் கேட்டவை கேட்டவை,
வல்லனாகிப் போற்றிக்கோட லதுவதன் பண்பே.
-இதனானறிக. *
எத்திற மாசா னுவக்கு மத்திற, மறத்திற் றிரியாப் படர்ச்சி வழிபாடே *
செவ்வன் றெரிகிற்பான் மெய்ந்நோக்கிக் காண்கிற்பான்,
பல்லுரையுங் கேட்பான் மிகப்பெரிதுங் காதலான்,
றெய்வத்தைப் போல மதிப்பான் திரிபில்லா,
னிவ்வாறு மாண்பு முடையாற் குரைப்பவே,
செவ்விதி னூலைத் தெரிந்து*
வழக்கி னிலக்கண மிழுக்கின் றறிதல்,
பாடம் போற்றல் கேட்டவை நினைத்த
லாசாற் சார்ந்தவை யமைவரக் கேட்ட,
லம்மாண் புடையோர் தம்மொடு பயிறல்,
வினாதல் வினாயவை விடுத்த லென்றிவை,
கடனாக் கொளினே மடநனி யிகக்கும்.
அனைய நல்லோன் கேட்குவனாயின்,
வினையி னுழப்பொடு பயன்றலைப் படாஅன்
அனைய னல்லோ னம்மர பில்லோன் ,
கேட்குவ னாயிற் கொள்வோ னல்லன்.
-இவ்வாற்றா னுணர்க.
இம்மாணாக்கன் முற்றவுணர்ந்தானாமாறு *
ஒருகுறி கேட்போ னிருகாற் கேட்பிற்,
பெருக நூலிற் பிழைபா டிலனே.
*
இருந்து என்பதன்பின் - ஏடவிழெனவவிழ்த்து எனப் பாடமும் உண்டு