(௪)
தொல்காப்பியம்
முக்காற் கேட்பின், முறையறிந் துரைக்கும்.
ஆசா னுரைத்தவை யமைவரக் கொளினுங்,
காற்கூ றல்லதுபற்றல வாகும். *
அவ்வினை யாளரொடு பயில்வகை யொருபாற்,
செவ்விதி னுரைப்ப வவ்விரு பாலு,
மையறு புலமை மாண்புநனி யுடைத்தே.
பிறர்க்குரை யிடத்தே நூற்கலப் பாகும்,
திறப்பட வுணருந் தெளிவி னோர்க்கே.
-இதனானறிக.
பொதுப்பாயிர முற்றிற்று.
- இனிச் சிறப்புப்பாயிரமாவது -
தன்னாலுரைக்கப்படு நூற்கின்றியமையாதது. அதுபதினொருவகையாம்:
ஆக்கியோன் பெயரே வழியே யெல்லை,
நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே,
கேட்போர் பயனோ டாயெண் பொருளும்,
வாய்ப்பக் காட்டல் பாயிரத் தியல்பே.
காலங் களனே காரண மென்றிம்,
மூவகை யேற்றி மொழிநரு முளரே *
இப்பதினொன்று மிப்பாயிரத் துள்ளே பெறப்பட்டன.
இனிச் சிறப்புப்பாயிரத் திலக்கணஞ் செப்புமாறு-
பாயிரத் திலக்கணம் பகருங் காலை,
நூனுதல் பொருளைத் தன்னகத் தடக்கி
யாசிரிய மானும் வெண்பா வானு,
மருவிய வகையா னுவறல் வேண்டும்.
* இதனானறிக.
நூல்செய்தான் பாயிரஞ் செய்யிற் றன்னைப்புகழ்ந்தானாம். *
தோன்றா தோற்றித் துறைபல முடிப்பினுந்
தான்தற் புகழ்த றகுதி யன்றே.
என்றலின்.
பாயிரஞ் செய்வார் தன்னாசிரியருந் தன்னோடொருங்கு கற்ற வொருசாலை மாணாக்கருந் தன்மாணாக்கரு மெனவிவர்.
அவருள் இந் நூற்பாயிரஞ் செய்தார் தமக்கொருசாலை மாணாக்கராகிய பனம்பாரனார்.
வடவேங்கடந் தென்குமரி யாயிடை — (என்பது) வடக்கின்கண் வேங்கடமுந்
தெற்கின்கட் குமரியுமாகிய வவ்விரண்டெல்லைக்குள்ளிருந்து—-
தமிழ்கூறு நல்லுலகத்து வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலின் - (எ-து) தமிழைச் சொல்லு நல்லாசிரியரது வழக்குஞ் செய்யுளுமாகிய வவ்விரண்டையு மடியாகக் கொள்ளுகையினாலே —
செந்தமிழியற்கை சிவணிய நிலத்தொடு முந்து நூல்கண்டு— (எ-து) அவர்கூறுஞ் செந்தமிழியல்பாகப் பொருந்திய செந்தமிழ் நாட்டிற்கியைந்த வழக்கோடே முன்னை யிலக்கணங்க ளியைந்தபடியை முற்றக் கண்டு —
முறைப்பட வெண்ணி-(எ-து) அவ்விலக்கணங்க ளெல்லாஞ் சில்வாழ் நாட் பல்பிணிச் சிற்றறிவினோர்க் கறியலாகாமையின் யானித்துணை வரையறுத்