பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/120

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
 

வார்டர் வள்ளல்கள்.




மதியம் சட்டியும் கலசமும் வந்தன;
உணவினை அளிப்பவன் உவப்பொடு வந்தான்.
[1]*கேப்பை ரொட்டியும் கீழதன் வைத்தோர்
கோதுமை ரொட்டியும் குழம்பும் தந்தே
“உண்மின் கோதுமை; ஒழிமின் கேப்பை”
என்றவன் சொல்லி ஏகினான். யானும்
அவ்வா றுண்டேன், யந்திரம் சுற்றினேன்.
இரவில் இரண்டாம் [2].யாமம் சிவகாசி
ஆறுமுகம் பிள்ளையும், அவனொடு சேர்ந்து
சிவகாசிக் கலகக்தில் தெண்டனை அடைந்த
வடுகு ராமனெனும் மாண்பல நிறைந்த
சீனியர் கான்விக்டு வார்டரும் சிலரும்
வந்தனர்; வணங்கினர்: வடைபழம் வழங்கினர்.
"உம்முடைய ஆள்கள் ஒருசிலர் ஈங்குளேம்
இந்த பிளாக்கிற் கேகற்க என்று
செப்பி யுள்ளான் [3]ஜெயிலர் மீஞ்சேல்
ஒவ்வோர் இரவினும் உம்மையாம் காண்பேம்
விடியற் காலம் ரவை உப்பு மாவும்
மதியமும் மாலையும் ரவைகற் றோசையும்
அனுப்புவோம் அருந்துமின் அறியா மால்பிறர்”

 

  1. கேப்பை - கேழ்வரகு.
  2. யாமம் - சாமம், நடுநிசி
  3. Jailer Mr. Minchel.

115