இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சிறைக்குள் கலகம்
"அப்படி யானால் அவரைக் கொல்வதென்?
செப்பிய தீயஜெயிலர் வேலைவிட்
டேகும் படிசெயல் போதுமே" என்றேன்.
"ஆமெனக் கூறி மூவரும் போயினர்.
அடுத்த ஞாயிறில் அடுத்ததும் இருமணி
ஜெயிலர் அரங்கு தெறுகள மாயது ;
டேஞ்சர் பிசிலும் டேஞ்சர் பெல்லும்
ஒலித்தன. கைதிகள் உடைத்தனர் பூட்டை.
ரீஸர்வ் போலீசார் நிமிஷம் வந்தனர்.
சுவர்மேல் ஏறிய துட்டரைச் சுட்டனர்.
ஒருவன் உயிர்நீத் துடன்கீழ் வீழ்ந்தான்.
பலரைப் பிடித்துச் சிறையுள் அடைத்தனர்.
பிரேதம் போல ஜெயிலரைத் தூக்கி
அனேகர் சென்றனர் ஆஸ்பத் திரிக்கே.
கண்டேன் யானும் கொண்டேன் உவகை.
அன்றிர வினில்அச் சென்றால் ஜெயிலின்
கைதிகட் கெல்லாம் கற்கண்டும் பழமும்
வழங்கினர் காங்விக்டு வார்டர் மகிழ்ந்தே.
எலாரும் கொண்டுண் டின்புற் றிருந்தனர்
பொலாத ஜெயிலர் போயினன் என்றே.
டேஞ்சர் பிகில் அபாயச்சீழ்க்கை
டேஞ்சர் பெல் - அபாயமணி.
122