சர்க்கார் வக்கீலுக்குச் சாட்டை!
பப்ளிக் ப்ராஸிக் கூட்டர் " சிறைநுமக்
கெப்படி யிருக்கிற' தென்று வினவினன்.
“. சிலநான் கீயவண் சென்றமநீர்த் திருந்தால்
நலமெலாம் காண்பாய் நன்று" யென்றேன்.
கோர்ட்டில் இருந்தவர் குலுங்கச் சிரித்தனர்.
கோர்ட்டி லிருந்தியான் கொடுஞ்சிறை சென்றேன்.
சூப்பிரண்ட டெண்டு. "சொன்னாய் சாக்ஷியம்;
ஏற்படு வனவெலாம் இனிக்காண் என்றான்.
" காணவே வந்துளேன்; காண்கிறேன்" என்றேன்
அடுத்த நீங்கட் பார்வையில்
இவற்குக்
கடுத்த தனிச்சிறை கொடுத்துவை என்று
சிகிச்சை முடிந்து திரும்பிய ஜெயிலர்பால்
துடித்துச் சொன்னான் சூப்பிரண்: டெண்டு;
அவன் எனைத் தனிச்சிறை அனுப்பினன். பின்னர்,
செக்குவே லைக்கிவன் செல்வதால் அங்குள
கொடியகை திகனிவன் மொழிகளைக் கேட்டுமுன்
போலக் கலகம் புரியினும் புரிவர்
ஆதலால் இவன் தன் அரங்கினில் இருந்தே
நூலை முறுக்கும் வேலையைச் செயும்படி
செய்' எனக் காட்ஸன் செப்பினன் மீச்செல்பால்.
அவன்யான் தங்கிய அரங்கிற் கடுத்த
தனியரங் கொன்று தந்ததிற் பகலில்
ராட்டினம் வைத்து நூல் முறுக் கென்றான்.
மூன்று நூல் சேர்த்து முறுக்கிக் கொடுத்தேன்.
அத்தனி அரங்கில்யான் அமர்ந்தகாலத்தில்
- அமிர்த பஷா"ரும் தமிழ் "மீத் திர'னும்
ஹிந்து"வும் நாள்தொறும் வந்தன மறைவில்.
அவையும் தமிழ் நூல் ஆங்கில நூல்களும்
நவையறக் கற்றேன்! நற்றவம் புரிந்தேன்
1
126
126