இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
உன்வேலை செய்யவோ உள்ளேவந்தேன்?’
காலை ஒன்றில் காட்ஸன் விளித்து” நீ
கான்விக் டாபிசர் வேலை பார்ப்பின்
வருஷம் ஒன்றிற்கு மாதம் மூன்று
கழியும் ; உறவினர் காண்டலும், கடிதம்
எழுதலும், பெறுதலும் அனுமதிக்கப்படும்
மாதம் ஒருமுறை வேலையும் இல்லை;நல்
உடையும் அரிசி உணவும் பெறுவாய்.
கான்விக் டாபிசர் ஆகின் றாயா?”
என்று வினவினன். “நன்று நீ சொன்னது ;
ஆனால் யான்சிறை ஆள்கைக் குதவிட
136