பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/144

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
 

நாலு பக்கமும் காலி நிலமும்
மூலை யொன்றில் நீர் மொள்ளும் கிணறும்,
மூலைமற் றொன்றில் மொய்ம்பார் வழியும்,
காலிநிலம் ஒன்றில் கக்குஸ்கள் பலவும்.
வேலைசெய் கைதிக்கு வேம்பின் நிழலும்,
நடுத்தோட் டத்தில் வடுவிலாக் குரோட்டன்
செடிகளும் நன்மணம் தேனொடு வீசும்
முல்லை பிச்சி மல்லிகை ரோஜா
அல்லும் பகலும் அலரும் செடிகளும்
நிறைந்திருந் தனகாண், நிலவுல கத்திலே
சுவர்க்கம் இதுவெனச் சொல்லும் படியே.
அந்த பிளாக்கை அடைந்ததும் எனக்கு
வந்த ததிர்ஷ்டம் என்றுளம் கருதினேன்.
கஞ்சினை ஒத்த விகக் கலெக்டர்
சிறைக்கெனை அனுப்பிக் குறைத்த மறுநாள்
திருநெல் வேலியில் தீயிட்ட கேஸ்களில்
வருஷத் தீர்ப்புகள் வழங்கப் பெற்ற
நலமார் சங்கா கா :முதல்
பலரவண் இருக்கும் பான்மையும், அவர் அச்
சிறையிற் புகுந்த தினத்தில் டிட்டி
ஜெயில கைதிகள் சிலரால் அவரைக்
கம்பு கொண் டடித்த வம்புகள் பலவும்
கேட்டுளம் கொண்டு வாட்டமிக வுற்றேன்.
சைஸ்எனும் ஜெயிலர் நல்கினன் தும்பு
சைஸ் செயும் வேலையைத் தங்களற் களித்த
அரங்குகள் ளிருந்தே உரங்கொள அந்த
வேலையைச் செய்தேன். மேலைநாள் கோவைச்
.
| சைஸ்செய்தல்
ஒழுக்கு படுத்தல், Size.
139

 

139