அடுத்த வகுப்பினை அமைத்திட எந்தை
அடுத்த 'புதியம் புத்தூர் அமர்ந்த
ஆடம்ஸன் என்னும் ஆங்கிலப் பாதிரி
நாடு மதித்திட நல்ல கிறிஸ்தவ
மதத்தினை மிக்க வலத்தொடும் தக்க
பதத்தொடும் விதைத்திடும் பண்புடை யாளன்,
தன்னைக் கண்டு தகவொடு பேசி
என்னூர் மறுதினம் எய்திடச் செய்து,
- மதநூல் தவிர மற்றவை பயிற்றும்
விதமாப் பேசி வேலையை முடித்துப்
பள்ளிமேற் பார்வையை பண்பொடு கொடுத்தனன்
பள்ளியை ஏற்றவன் பக்கத் திருந்த
சுவாமி நாதத் தூயோன் தன்னை
அவாவி மேல் உபாத்தியா அமர்த்திச் சென்றனன்.
மேலோ னிடத்து விரும்பியான் கற்கையில்
சாலப் படித்த சண்முகம் பிள்ளையை
வருத்தித் தந்தனன். வகுப்பைந் தா றினில்
திருத்திய கற்றுத் தேறினேன் பரீட்சையே,
என்னூர் படிப்புக் கிறுதி யாயது ;
என்னுடை வயதன் றீரே ழாயது.
அருமந் திரத்தை அம்மைக் கருளிய
3 திருமந் திரநகர் சென்றேன் ; தந்தை
உத்தம || உரோமன் காதலிக் சாலையில்
புதியம் புத்தூர் - தட்டப்பாரை ஊருக்கு அருகிலுள்ள சிற்றூர்.
மத ஏன் - பைபின் (Bible)
1 வயது அன்று ஈரேழாயது--பதினான்கு வயதானது
8 திருமந்திர நகர்- தூற்றுக்குடி
|| உரோமன் காதலிக் சாலை (Roman Catholic School
(Xaviers High School)
10
10