பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பகைவர் என்றே பகைப்பன் வெறுப்பன்.
ஜெயிலின் சூப்பிரண் டெண்டும் டாக்டரும்
ஜெயிலர் சொற்படி செய்யும் பொம்மைகள்.
வார்டர் முதலிய மற்றையோர் ஜெயிலர்
ஆர்டர்க் கென்றும் அஞ்சும் அடிமைகள்
ஜெயிலர் செய்ததீச் செயல்களுக் கஞ்சா
ஜெயில்இன்ஸ் பெக்டர் ஜெனரல் இடம்யான்
பிராது சொல்லிய பிழைக்குத் தெண்டனை
தராது விடுவனோ சாற்றிய ஜெயிலர்?
கூறிய அழகிய கோரண் டையின் அரங்
கேறியே வந்து “நீ இன்ஸ்பெக்டர் ஜெனரல்பால்
என்மேல் பிராதுதான் இயம்பினை அன்றோ?
என்மேல் செயலெலாம் இனிநீ காண்பாய்.
என்னொடு வா” என் றியம்பினான் சென்றேன்.
மன்னினேம் சிறையுள் மன்னிய மூன்றாம்
பிளாக்கின் ஹாலுள்,பிரிண்டிங் போர்மன்—அச்சாலை மேஸ்திரி.
“பிரிண்டிங் போர்மனை
எழுத்தின் ஸ்டாண்டு—எழுத்துக்கள் வைக்கப்படும் ஸ்டாண்டு. ஸ்டாண்டுடன் இங்கு வரச்சொல்”
என்றொரு வார்டர்பால் இயம்பினான் ஜெயிலர்
நன்றெனச் சென்றான். நவின் றவன் வந்தான்
அச்செழுத் துக்கள் வைக்கப் பட்டுள
பெட்டிகள் கொண்டு நிற்கும் ஸ்டாண்டொடு.

“தினந்தொறும் காலையில் ஸ்டாண்டினை
[கொண்டுவை ;
தினந்தொறும் மாலையில் ஸ்டாண்டினை
[கொண்டுபோ

காலை முதல் இவன் மாலை வரையில்
கம்போஸ் செய்வதை எம்பால் காட்டுக.”

பிரிண்டிங் போர்மன்_அச்சாலை மேஸ்திரி,
ஸ்டாண்டு_எழுத்தக்கள் வைக்கப்படும் ஸ்டாண்டு


10

145