பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/152

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இப்படிச் சிலநாள் ஏகின. அந்நாள்
தப்பிலென் மைத்துனன் சாற்றிய பிச்சனும்
கண்ணணூர் வந்து *கணபதி சார்பில்
நண்ணி யிருந்தனர். நாள்தொறும் அவர்க்கு
ஜெயிலுள் நிகழ்ந்தன தெரிவித்து நின்றேன்,
ஜெயிலுள் வந்தெனைத் தெரிசித் தனர்அவர்.
செப்பிய மாப்பிள்ளை சிலதினம் கழிந்தபின்
எப்படி யோதான் என்வசம் ஆயினன்;
சொன்னது கேட்டனன்; தொண்டுகள் செய்தனன்.
பின்னிர வினில்யான் மன்னினேன் உறக்கம்.
ஜெயிலின் சூப்பிரண் டெண்டாம் ஸாமியார்
அளவிலா தென்மேல் அன்புகொண் டிருந்தனன்,
அரிசி உணவே அளித்து வந்தனன்;
அனுமதி தந்தனன் அன்புடன் யான் அவண்
நூல்கள் படிக்கவும் நூல்கள் எழுதவும்.
சரீரப் பயிற்சிகள் தக்கபடி செய்தென்
சரீரப் பலமும் சரீர நலனும்
,


கணபதி-கண்ணூர் ரயில்வே கண்டிராக்டர் கணபதியாபிள்ளை.

147