பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உண்ணாவிரதம் : உள் விளக்கெண்ணெய்,

"திடமொடு வேலையைச் செயவேண் டுங்கால்
கடவுளைத் தொழுததென் கழறுக" என்றான்
"பொறுத்தருள்" என்றேன். மறுத்தவன்

[போயினன்,

அரிசி உணவை அன்றே நிறுத்தினன் ;
வரிசைப் படிகேழ் வரகுண வடுத்தது.
விடுதலைக் காலம் நெருங்கிநின் றமையால்
அதன்முன் இவனிடம் அரிசி உணவு
பெறுதல்வேண் டும்மென உளமொடு நினைத்தேன்.
உணவினை நிறுத்தினேன் ; உள்விளக் கெண்ணெய்
தினமொடு கொண்டேன் ; செலஒரு வாரம்
பத்துப் பவுண்டெடை குறைந்தேன் நிறுவையில்
அத்தைத் தெரிந்ததும் அளித்தனன் எனக்குச்
செப்பிய சூப்பிரண் டெண்டுநெல் சோறுபால்,
என்னுடை, எண்ணம் இனிது நிறை வேறினும்
என்னுடை உடம்புதான் இழந்த பலத்தினை
இன்னும் அடைந்தில தென்றியான் சொலினது
மன்னும் உண்மையாம் ; மற்றதா காது.
மெலிந்த உடம்பொடும் நலிந்த மனமொடும்
மெய்ப்பொருள் தொழுது மெய்ப்பொருள் கண்டு
மெய்ப்பொருள் ஆகி விளங்கினேன் சிலநாள்
செப்பிய எனது அப்பிலில் அளித்த
ஆறு வருஷ நாடு கடத்தல்
சிட்சையில் அரசி விக்டோரியா தான்
ஆயிரத் தென்ணூற் றைம்பத் தேழாம்.

130