இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
விடுதலை! விடுதலை!! விடுதலை!!!
ஆயிரத்து தொள்ளாயிரத்துப் பன்னிரண்டாம் வருஷம் டிஸம்பர் மாதம் ஒருநன் மாலையென் உடம்பில் எண்ணெய் சிறிது தடவி முழுக நிற்கையில்
ஒருவன் வந்தெனை ஜெயிலர் விளிப்பதா
அழைத்தான். சிறையுடை அணிந்துடன் சென்றேன். விடுதலை ஆர்டர் அடுத்தது.நீவிர்
வீடுற லாமென விளம்பினன் ஜெயிலர்
மைத்துனன் அனுப்பிய பட்டுடை உடுத்தியான்
வீடடைந் தேன்மாண் வீடடைந் தேனே!
152