பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

பரீட்சையில் இடரல்: பள்ளி மாற்றம்.

பின்னர் அந்நகர் 13 பிராட்டஸ் டண்டு
கலாசாலை தன்னிற் கற்றொரு வருடம்
சிலாக்கியம் பெற்றுத் தேறினேன் பரீட்சையில்,
மெற்றிரிக் குலேஷன் மேலாம் வகுப்பினிற்
கற்றிடத் திரும்பிக் கதேலிக் பள்ளியை
அடைந்தேன். அந்நாள் அங்கினி தமர்ந்து
மடந்தனை ஆண்ட மாண் கௌ சானல்
அன்பினைப் பெற்ற அந்தணர் குலத்தோன்,
இன்புறக் கல்வியை அன்புடன் உணர்த்தி
அபாத்திர மதனையும் அழகுறச் செய்யும்
உபாத்தியாய உத்தமத் தொழிலோன்,
tt அண்ணாத் துரைஎனும் அழகிய பெயரோன்,
நண்ணா தாரையும் நண்ணிடச் செய்வோன்,
அருளும் திறனும் அமைதரப் பெற்றுத்
தெருளும் புகழும் சிறக்கச் செய்தோன்
தன்னிடம் என்னையென் தந்தை சேர்த்தனன்.
அன்னவன் என்னை அன்புடன் ஏற்று
மகனெனக் கருதி மனை முன் இருத்தித்
‘தகவொடு கல்'எனச் சாற்றினன் ; யானும்
தந்தை அவனெனத் தாயவன் மனையெனச்
சிந்தையிற் கொண்டு திறத்துடன் அமர்ந்து
38 Caldwell High School.
T கௌசானல் - ரெவரெண்டு பாதர் கௌசானல்.
அபாத்திரம்- கற்கத் தகுதியிலான்.
tt அண்ணாத்துரை-அண்ணாத்துரை ஐயர்.
12

 

12