[1]நடுவினைப் புரிந்து நன்னிதி யீட்டிக்
கொடுவெனு முன்னங் கொடைபல வளித்துச்
சீரெலாங் கொண்டு திறத்துட னமர்ந்து
பாரிலென் அன்னை பரமாயி துணையா
உலக நாயகிக் கூழியம் செய்யும்
உலக நாத உத்தமப் பெயரினன்
மூன்றாம் மகனென முறைமையின் வந்த
சான்றோன் குமார சாமிஎன் போன்
நலமே புரிந்து நானிலம் வீட்டுச்
சிலநாள் தன்னிற் சிவபதம் அடைந்தனன்,
மற்றையர் இருவர் மங்கையர். அவர்நனி
கற்ற கணவரைக் கைப்பிடித் தேகி
ஒளியினை நிறுத்தி ஒண்ணிதி பெருக்கி
இளையாள் பெற்றனள் இருநன் மக்கள்.
முன்னவன் நல்ல முத்து சுவாமி;
பின்னவன் சுப்பிர மணிய பிள்ளை.
இருவரும் நன்மக வீன்று முந்திய
ஒருவன் சென்றான்; ஒருவன்வாழ் கின்றான்.
என்னொடு பிறந்தோர் எழுவ ராவா.
மன்னிய தமக்கை வள்ளி யம்மை
தங்கை யொருத்தி தரைவிட் டேகினள்.
இளையான் ஒருவன் என்னொடு சிலநாள்
பள்ளிக்கு வந்து படித்துப் பழகியென்
உள்ளம் வருந்திட உலகினை நீத்தனன்.
அவனுக் கிளையோன், அருமையொடு வளர்ந்தோன்,
எவனுக்கும் இளையான், ஈடில் குணத்தான்,
- ↑ நடுவு - நீதி.
4