பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/103

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

________________ 

மெய்ங்கிலை படைதல். தை உன்னி அடைந்து நல் வாழைச் செய். ப-ரை :- உன்னை அறிந்து -உனது எதார்த்த சொரூபத்தைத் தெரிந்து, உன் உடம்பும் - உனது சரீரத்தையும், உன் உளமும் - உனது நினைப்பையும், பண்படுத்தி- தூயனவாக்கி; அன்னை பிதா தெய்வம் அரும் குரவர் - தாய் தகப்பன் கடவுன் அருமை யான ஆசிரியர் இவர்களுடைய, பொன் அடியை - சிறந்த அடிகளை, சென்னிஉறவணங்கி-தலை பொருந்துமாறு சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து; சீர் அறங்கள் செய்து - சிறந்ததருனங்களைச் செய்து; ஒழுக் கம் - உயர்ந்தோரது நடையை, உன்னி அடைந்து- விசாரித்துக் கைக் கொண்டு, நல் ஊழ் செய்-நல்ல விதியை ஆக்குவாயாக. கரை:-- உனது நிளைப்பையும் செயலையும் நோக்கி நிற்கும் அறிவே நீ என்று உணர்ந்து, உனது சரீரத்தையும் நினைப்பையும் நல்லன வாக்கி, தாய் தந்தையரையும் கடவுளையும் ஆசிரியரையும் ஒவ்வொரு நாளும் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து, நல்ல தருமங்களைச் செய்து, ஒழுக்கங்களை யெல்லாம் கைக் கொண்டு, ஈல்ல விதியைச் செய்வாயாக………….. அறமொன்றே செய்தற் கரசாகி நின்று திறமொன்றே மேன்மேலுஞ் சேர்த்தது மறமொன்றி நிற்கின்ற நாடெல்லா நேர்நெறியிற் கொள்ளற்குக் கற்கின்ற துன்முற்கடன், அ-ம்:- செய்யுள் நடைய அதுவய ஈடை.