பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/108

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100 மெய்யறிவு, எவ் துணையும் செய்யாமல் - கன்னளவும் (ஒரு சிறி தும்) புரியாமல், எவ் உயிர்க்கும் - எந்த உயிருக்கும், நன்றே இயற்று-நன்மையையே செய்...................

  க-ரை:- பலவகை உயிர்களும் பரம் பொருளின் குழந்தைகளே என்று கருதி, அவ்வுயிர்களில் எதற்கும் என்றும் எவ்வளவும் தீமை செய்யாது, எவ்வுயிகளுக்கும் என்றும் நன்மையே செய். 

ஒருயிர்மற் றேருயிர்க்கிங் கூறுசெயி னவ்வுயிருன் னுருயிரென் றெண்ணிமுத லாய்ந்தகற்று-பாருயிர்க ளென்றுவரை யொன்றற்கொன் றின்னலிழைக் கின்தனவோ வன்றுவரை நீதீ யரசு......

அ-ம் :- இங்கு ஓர் உயிர் மற்று ஓர் உயிர்க்கு ஊறு செயின், அவ் உயிர் உன் ஆர் உயிர் என்று எண்ணி முதலை ஆய்ந்து அகற்று. பார் உயிர்கள் என்று வரை ஒன்றற்கு ஒன்று இன்னலை இழைக் கின்றனவோ அன்று வரை நீ தீ அரசு.

ப-ரை :- இங்கு-இவ்வுலகின் கண், ஓர் உயிர்-ஓர் உயிரானது, மற்று ஓர் உயிர்க்கு - வேறு ஓர் உயிருக்கு, ஊறு செயின் - தீங்கு செய்தால், அவ் உயிர் - தீங்கைச் செய்த அந்த உயிரும், உன் ஆர் உயிர் என்று எண்ணி-உனது அருமையான உயிரே என்று கருதி, முதல் ஆய்ந்து அகற்று - அத்தீங்கு செய்ததற்குரிய காரணத்தை விசாரித்துத் தெரிந்து நீக்கு . பார். உயிர்கள் பாரிலுள்ள உயிர்கள், என்று வரை-எந்நாள் வரையில், ஒன்றற்கு ஒன்று-ஓர் உயி/......