பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/110

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

மெய்யறிவு.

ஆனாய் — நீ நியாயம்புரியும் அரசனாகினை; நேர் இல்லாமெய் நிலையில் ஒப்பற்ற கடவுட்டன்மையில், பாதி அடைந்தாய் — ஒரு பாகத்தை அடைந்து விட்டாய்; என்று பார்— என்று அறிவாயாக.

க— ரை:— எந்நாள் முதல் உயிர்கள் ஒன்றற்கு ஒன்று தீங்கு புரியாமல் ஒத்து வாழ்கின்றனவோ அந்நாள் முதல் நீ நல்ல அரசனாகி விட்டாயென்றும் கடவுட்டன்மையில் பாதியை அடைந்து விட்டாயென்றும் அறிவாயாக.

ன்றறியு மாந்தரெலா நல்வினையைச் செய்துளத்தை வென் றுநடு நின்றருளான் மெய்யுணர— வென்றுலக மேம்படுமோ வன்றேநீ மெய்ந்நிலையை யெய்திநனி மேம்படுவா யஃதேமெய் வீடு. (௱)

அ-ம்:— செய்யுள் நடையே அ நுவய நடை.

ப-ரை:— நன்று அறியும்— இது நன்மை இது தீமை என்று பகுத்து அறியும், மாந்தர் எலாம் — மனிதர்களெல்லாம், நல்வினையைச் செய்து — அறச்செயல்களைச் செய்து, உளத்தை வென்று மனத்தை ஜயித்து, நடுநின்று — நடுவு நிலைமை தவறாது ஒழுகி, அருளால் — சுருணையால், மெய் உணர— கடவுளை உணருமாறு, என்று எந்நாள், உலகம் மேம்படுமோ— உலகமானது மேம்பாடு அடையுமோ, அன்றே நீ— அந்த