பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/111

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மெய்க்கிலை யடைதல். 103

நாளிலே நீ, மெய் நிலையை - கடவுட்டன்மையை, எய்தி-பூரணமாக அடைந்து, கனி மேம்படுவாய்-

மிக மேம்பாடு அடைவாய். அஃதே மெய்வீடு - அம் மேம்பாடே மெய்யான முத்தி.

  க-ரை:- பகுத்தறிவுடைய மனித சமூகம் முழுவதும் நல்ல செயல்களையே செய்து, மனத் 

தை அடக்கி, நடுவு நிலைமையில்‍ நின்று,கருணையால் கடவுளை உணருமாறு எந்நாளில் இவ்வுலகம் மேம் படுமோ, அந்நாளிலே நீ கடவுட்டன்மையைப் பூரணமாக அடைந்து மேம்படுவாய். அம்மேம் பாடே மெய்வீடு.

     மெய்யறிவு முற்றிற்று.


எஸ். வி. என். பிரஸ், மூக்கர் நல்லமுத்து தெரு, மதராஸ்.