பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



து. ன்னையறிதல். பிராணன் முதலியனவும் சேர்ந்து பாதம் முதல் சிர சுவரையுள்ள பல உறுப்புக்களாகிக் காட்சிக்குப்புலப் பட்டு நிற்பது உடம்பு. எண்ணும்மைகள் தொக்கன. உறுப்பு சா யொருமை. ஆக்க லளித்த லழித்த லீவை மூன்று மூக்கமொடு செய்யு முரங்கொண்டுங் - காக்கும் அறம்புரிய முற்படா தைம்பொறியிற் சென்று மறம்புரியுஞ் சத்தி மனம். soal அ-ம்: ஆக்கல் அளித்தல் அழித்தல் இ ை மூன்றையும் ஊக்கத்தொடு செய்யும் உரத்தைக்கொ ண்டும், ஐம் பொறியிற் சென்று காக்கும் அறத்தைப் புரிய முற்படாது மறத்தைப் புரியும் சத்தி மனம். ப-ரை:- ஆக்கல்- சிருஷ்டி, அளித்தல்-ஸ்திதி, அழித்தல் - சம்ஹாரம், இவை மூன்றும் - இத்தொழில் கள் மூன்றையும், ஊக்கமொடு-ஊக்கத்தோடு, செய் யும் - நடத்தும். உரம்கொண்டும் - வலிமையைக்கொண் டிருந்தும், ஐம்பொறியில் மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐந்து வாயில்களில் சென்று- பிரவே சித்து, காக்கும் பிறவித்துன்பங்களினின்று காப்பாற் றும், அறம்புரிய முற்படாது - தருமங்களைச்செய்ய முன்னுறாது, மறம் புரியும் - அதருமங்களைச்செய்யும். சத்தி -நினைப்பாகிய) சக்தி, மனம் - மனமாம். க-ரை:- - சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் என்னும் முத்தொழிலையும் செய்யத்தக்க வலிமையைக்கொண்



5

பிராணன் முதலியனவும் சேர்ந்து பாதம் முதல் சிர சுவரையுள்ள பல உறுப்புக்களாகிக் காட்சிக்குப் புலப்பட்டு நிற்பது உடம்பு.

எண்ணும்மைகள் தொக்கன. உறுப்பு சாதி யொருமை. ஆக்க லளித்த லழித்த லிவை மூன்று மூக்கமொடு செய்யு முகங்கொண்டுங்-காக்கும் அறம்புரிய முற்படா தைம்பொறியிற் சென்று மறம்புரியுஞ் சத்தி மனம்.

அ-ம்:- ஆக்கல் அளித்தல் அழித்தல் இவை மூன்றையும் ஊக்கத்தொடு செய்யும் உரத்தைக்கொண்டும், ஐம்பொறியிற் சென்று காக்கும் அறத்தைப் புரிய முற்படாது மறத்தைப் புரியும் சத்தி மனம்,

 ப-ரை:-ஆக்கல்-சிருஷ்டி, அளித்தல்-ஸ்திதி, அழித்தல்- சம்ஹாரம், இவை மூன்றும் -இத்தொழில்கள் மூன்றையும், ஊக்கமொடு ஊக்கத்தோடு, செய்யும் நடத்தும். உரம்கொண்டும்-வலிமையைக் கொண்டிருந்தும், ஐம்பொறியில் மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐந்து வாயில்களில், சென்று-பிரவேசித்து, காக்கும் பிறவித்துன்பங்களினின்று காப்பாற்றும், அறம்புரிய முற்படாது - தருமங்களைச் செய்ய முன்னுறாது, மறம் புரியும் அதருமங்களைச் செய்யும். சத்தி- (நினைப்பாகிய) சக்தி, மனம் மனமாம்.
 க-ரை:- சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் என்னும் முத்தொழிலையும் செய்யத்தக்க வலிமையைக் கொண்