தன்னையறிதல். 9 மனக்குதிரை மெய்யறத்தின் மார்க்கத்தை விட்டுத் தனக்குவியன் மாதர்கிலஞ் சாரு-முனற்கைக் கடிவாளத் தாலிழுத்துக் காட்டி நெறி சேர்க்கும் பிடிவாத மாவான்மா பின்பு. (௯)
அ-ம்:- மனக்குதிரை மெய்யறத்தின் மார்க்கத்தை விட்டுத் தனக்குவியலையும் மாதரையும் நிலத்தையும் சாரும்; பின்பு ஆன்மா உனற்கைக்கடிவானத்தால்(அதைப்) பிடிவாதமாக இழுத்து (அதற்கு) நெறியைக் காட்டி (அதை) நெறியிற் சேர்க்கும்.
ப-ரை:-மனக்குதிரை - மனமாகிய குதிரை, மெய்யறத்தின் மார்க்கத்தைவிட்டு - உண்மையான தருமமாகிய வழியை நீங்கி, தனக் குவியல்-(அதரும நிமித்தங்களாகிய) பொருட்குப்பையையும், மாதர் - பெண்டிர்களையும், நிலம் - பூமியையும், சாரும் பொருந்தும்; பின்பு - பின்னர், ஆன்மா - ஆன்மாவானது, பிடிவாதமாக-ஒரே பிடியாக, உனற் கைக்கடிவாளந்தால்- சிந்தித்தல் என்னும் கடிவாளத்தால், இழுத்து - அம்மனத்தை இழுத்து, நெறி காட்டி - அதற்கு அறவழியைக் காட்டி, நெறியில் சேர்க்கும் - (அதை) அவ்வறவழியில் சேர்க்கும்.
க-ரை:-மனம் அறநெறியைவிட்டு மறநெறியில் செல்லும்;ஆன்மா அதைப் பிடிவாதமாக இழுத்து அறநெறியில் சேர்க்கும். உடம்பு மனத்தோடு புனைத்துள்ளவொரு நல்ல சடம்பொருது நின்றான்மா தன்னின்-அடம்புரிந்து நன்னெறியிற் சேர்க்கவதை நாய் போலப் பின்பற்றும் புன்னெறியிற் போய மனம்.(௰)