________________
விதியியல் அறிதல்,
பால் கேட்டல் எவன் ? காழ்ப்ப அறத்தைச் செய லால் ஆவது எவன்? அஃதை ஒழித்து மிக்க மறத் தைச் செயலால் ஆவது எவன்?
ப-ரை:-ஊழ்ப்படி.-விதிப்படி, ஆம் என்னின்(எல்லாம்) நிகழும் என்றால், மோக்கமொடு-மோக்ஷத் தோடு, கீழ்ப்படியும் - நரகத்தையும், மேல்படி யும்-சுவர்க்கத்தையும் (பற்றி), உயர்ந்தோர் பால்பெரியோர் இடத்தில், கேட்டல் கேட்டுத்தெளிதல், எவன்-யாது காரணம்பற்றி ? காழ்ப்ப-மிகுதியாக, அறம் செயலால் - புண்ணியங்களைச் செய்தலால், ஆவது- ஆகும்பயன், எவன்-பாது? அஃது ஒழித்துஅதனைவிடுத்து, மிக்க-மிகுதியாக, மறம் செயலால். பாவங்களைச் செய்தலால், ஆவது - ஆகும் பயன், எவன்-பாது?
க-ரை :--விதிப்படியே யாவும் நடக்குமென்றால் நரகம் சுவர்க்கம் மோக்ஷம் இவற்றைப்பற்றியும் இவற்றின் ஏதுக்களைப்பற்றியும் விசாரனை செய்யவேண்டி யதுமில்லை; புண்ணியாாவங்களைச் செய்யவேண்டி யதுமில்லை. கருமத்தின்படியாவும் நிகழுமேயன்றிக் கடவுள் விதித்தபடி எல்லாம் நிகழுமென்று கூறுதல் பிழை பென்பது குறிப்பெச்சம். விதிதன்னினிங்கு மிகு வலியே தில்லைச் - சதிசெயினும் வந்ததுதான் முக்கு-- மதியால் அதனை டல் கூடாதேன் முன்றே ருரைத்த இதனைவிட லெங்ங னெனின்,