பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

________________

மெய்யறிவு. க-ரை :--முதல் அதிகாரத்தில் நான் கூறியுள்ள உன் இலக்கணங்களை நீ எஞ்ஞான்றும் நினைந்து கைக்கொண்டு நிற்பாயேல், நீ மேம்பாடுற்று நீ கட வுளது குழந்தை யென்று தெரிந்து கொள்வாய். தேயமெலாக் காண்டற்குத் தேரூர் வான் செய்வதொத்து மாயமனம் பூட்டியுள மாணுடம்பைத் - தூய நிலைமையுற வைத்தாள் த னீசெய்ப வற்றுள் தலைமையுறு மொன்று தனித்து. (சக) அ-ம்:-தயத்தை எல்லாம் காண்டற்குத் தேரை ஊர்வான் செய்வது ஒத்து, மாய மனத்தைப் பூட் டியுள்ள மாண் உடம்பைத் தூயநிலைமையே உற வைத்து ஆள் தல் நீ செய்பவற்றுள் தனித்துத் தலைமை உறும் ஒன்று. ப-ரை:-தேயம் எலாம் காண்டற்கு- உலகத்தி லுள்ள பல தேசங்களையும் பார்ப்பதற்காக, தேர்வர் வான் -தேரை ஈடாத்திச் செல்கின்றவன், செய்வது ஒத்து- தனது தேரை நல்ல நிலைமையில் வைத்துக் கொள்வது போல, மாயமனம் பூட்டியுள - மாயமன தைப் பூட்டியுள்ள, மாண் உடம்பை- மாட்சிமைப் பட்ட சரீரத்தை, தூய நிலைமை உற-சுத்தமான நிலைமைகளே பொருத்து மாறு, வைத்து ஆள் தல்-(6) பாதுகாத்து நடாத்துதல், நீ செய்பவற்றுள் - நீ செய்யவேண்டிய நல்ல செயல்களில், தனித்துத் தலைமை உறும் ஒன்று - ஒப்பற்று முதலாவதாக நிற்கும் செயலாம்………